புதிய கப்பல் சோதனை ஓட்டம்

புதிய கப்பல் சோதனை ஓட்டம்

2 mins read
6fdd430d-7a3b-4054-a77e-9ec0e09a6537
புதிய நீர்மூழ்கிக் கப்பல் வாகிர் வெள்ளோட்டம். படம்: ஏஎஃப்பி -

மும்பை: இந்­தி­யா­வி­லேயே முழு­மை­யா­கத் தயா­ரிக்­கப்­பட்ட ஸ்கார்­பீன் ரக 'வாகிர்' நீர் மூழ்­கிக் கப்­பல் நேற்று முன்­தி­னம் அர­பிக் கட­லில் வெள்­ளோட்­டம் பார்க்­கப்­பட்­டது.

இது, இந்­திய கடற்­ப­டைக்­குச் சொந்­த­மான 5வது கப்­ப­லா­கும்.

மும்­பை­யில் நடந்த சிறப்பு நிகழ்ச்­சி­யில் மத்­திய ராணுவ இணை அமைச்­சர் ஸ்ரீபாத் நாயக் மற்­றும் அவ­ரது மனைவி விஜயா ஆகி­யோர் காணொ­ளிக் காட்சி வழி யாகப் பங்­கேற்­ற­னர்.

இதில் 'வாகிர்' நீர்­மூழ்கி கப்­ப­லின் சோதனை ஓட்­டத்தை அமைச்­ ச­ரின் மனைவி விஜயா தொடங்கி வைத்­தார். வாகிர் நீர்­மூழ்கி கப்­ப­லின் சோதனை ஓட்­டம் தொடங்­கி­யி­ருப்­ப­தன் மூலம் நீர்­மூழ்கிக் கப்­பல் கட்­டும் திற­னில் இந்­தி­யா­வின் நிலை இன்­னும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு இருப்­ப­தாக எம்­டி­எல் எனும் மசா­கன் கப்­பல் கட்­டும் நிறு­வ­னம் குறிப்­பிட்டு உள்­ளது. ஸ்கார்ப்­பீன் வரிசை நீர்­மூழ்கி கப்­பல்­களில் 6வது கப்­ப­லான வக்­‌ஷீ­ரும் சோதனை ஓட்­டத்­துக்கு தயா­ராகி வரு­கிறது.

இந்­திய கடற்­ப­டை­யின் 'புரோ­ஜெக்ட்-75' திட்­டத்­தின் கீழ் பிரான்ஸ் கடற்­பா­து­காப்பு மற்­றும் எரி­சக்தி நிறு­வ­ன­மான 'டிசி­என்­எஸ்' வடி­வ­மைத்து மும்­பை­யில் உள்ள மசா­கன் கப்­பல் கட்­டும் தளத்­தில் ஆறு நீர் மூழ்கி கப்­பல்­கள் கட்­டப்­பட்டு இந்­திய கடற்­ப­டை­யில் சேர்க்­கப்­பட்டு வரு­கின்­றன.

அந்த வகை­யில் இது­வரை கல்­வாரி, கந்­தேரி என்ற இரண்டு கப்­பல்­கள் கடற்­ப­டை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளன. 3வது நீர்­மூழ்­கிக் கப்­பல் 'கரஞ்ச்', 4வது கப்­பல் 'வேலா' கட்டி முடிக்­கப்­பட்டு சோதனை ஓட்­டத்­தைத் தொடங்­கி­யுள்­ளன. இந்த வரி­சை­யில் 5வது நீர்­மூழ்­கிக் கப்­பல் தற்­போது வெள்­ளோட்­டம் விடப்­பட்­டுள்­ளது. கடலின் மேற்பகுதியில் உள்ள எதிரி நாட்டு கப்பல்களைத் தாக்கி அழித்தல், நீர் மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழித்தல், கடற்பகுதி கண் காணிப்பு, எதிரி கப்பல்கள் பற்றி ரகசிய தகவல் களைச் சேகரித்தல் உள்ளிட்ட திறன்களை இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் பெற்றுள்ளன.