'இந்திய-சீன மோதலை மற்ற நாடுகள் சாதகமாகப் பயன்படுத்தலாம்'

'இந்திய-சீன மோதலை மற்ற நாடுகள் சாதகமாகப் பயன்படுத்தலாம்'

1 mins read

புது­டெல்லி: இந்­திய-சீன மோதலை மற்ற நாடு­கள் தங்­க­ளு­டைய அர­சி­யல் ஆதாயத்­துக்­காக பயன்­ப­டுத்­தும் அபா­யம் உள்­ள­தாக ரஷ்யா எச்­ச­ரித்­துள்­ளது. இந்­தி­யா­வுக்­கான ரஷ்ய துணைத் தூதர் ரோமன் பாபுஷ்­கின் நேற்று முன்­தி­னம் இணை­யம் வழி­யாக பேட்­டி­ய­ளித்­தார்.

அப்­போது பேசிய அவர், ஆசிய கண்­ட­த்­தில் இரு பெரும் நாடு­ க­ளான இந்­தி­யா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடையே பதற்­றம் நில­வு­வது இயல்­பா­கவே எங்­க­ளுக்கு கவ­லை­ய­ளிக்­கிறது என்­றார்.

"இரு நாடு­களும் ஷாங்­காய் ஒத்­து­ழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் ஆகிய அமைப்­பு­களில் உறுப்­பி­னர்­க­ளாக உள்­ளன. இது­போன்ற அனைத்துலக அமைப்­பு­களில் ஒத்­து­ழைக்க வேண்டி இருக்­கும்­போது, பேச்­சு­வார்த்­தை­தான் நல்ல வழி­முறை. உல­கம் முழு­வ­தும் நிச்­ச­ய­மற்ற தன்மை நிலவி வரும்­போது, இந்­தியா-சீனா இடை­யி­லான பதற்­றம், இந்த வட்டாரத்­தில் நிலையற்ற தன்­மையை உரு வாக்கி விடும்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

"இரு நாடு­களும் ஆக்­க­பூர்வ பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­ப­டு­வதை நாங்­கள் ஊக்­கு­விக்­கி­றோம்," என்­றும் ரோமன் பாபுஷ்­கின் வலி­யு­றுத்­தி­னார்.