தேஜஸ்வி யாதவ்: பீகார் தேர்தலில் சூழ்ச்சி

தேஜஸ்வி யாதவ்: பீகார் தேர்தலில் சூழ்ச்சி

2 mins read

பாட்னா: பீகா­ரில் தற்­போ­தைய முதல்­வர் நிதிஷ்­கு­மார் தலை­மை­யி­லான ஐக்­கிய ஜனதா தளம்-பார­திய ஜனதா கூட்­டணி வெற்றி பெற்­றது.

முன்­னாள் முதல்­வ­ரான லாலு பிர­சாத் யாத­வின் மகன் தேஜஸ்வி யாதவ் தலை­மை­யி­லான ராஷ்­டி­ரியா ஜனதா தளம்-காங்­கி­ரஸ்-கம்­யூ­னிஸ்ட் கட்­சி­கள் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய மெகா கூட்­டணி தோல்­வி­ய­டைந்­தது. இதில் காங்­கி­ரஸ் கடும் சரி­வைச் சந்­தித்­தது.

கருத்­துக் கணிப்­பு­கள் எல்­லாம் மெகா கூட்­ட­ணியே வெற்றி பெறும் என்று தெரி­வித்த நிலையில் பாஜக கூட்­டணி வெற்றி பெற்­றது அர­சி­யல் கட்­சி­களை அதிர்ச்­சி­ய­டைய வைத்­துள்­ளது.

இந்­தத் தேர்­த­லில் ஐக்­கிய ஜனதா தளம்-பாஜக கூட்­டணி 125 இடங்­களில் வெற்றி பெற்று ஆட்­சியை தக்க வைத்­துக் கொண்­டது.

தேஜஸ்வி யாதவ் தலை­மை­யி­லான மெகா கூட்­டணி 110 இடங்­களில் வெற்றி பெற்­றது.

அதா­வது வெற்­றிக்கு 15 இடங்­கள் குறை­வாக மெகா கூட்­டணி பெற்­றுள்­ளது.

இந்த நிலை­யில் இந்­தக் கூட்­ட­ணி­யின் சட்­ட­சபை தலை­வ­ராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார்.

இதை­ய­டுத்து பேசிய தேஜஸ்வி யாதவ், "பீகார் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பண பலம், ஆள் பலம் மற்­றும் சூழ்ச்­சி­யால் தேசிய ஜன­நா­ய­கக் கூட்­டணி வெற்றி பெற்­றுள்­ளது," என்று குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.

"ஆள் பலம் மற்­றும் சூழ்ச்­சி­யி­னால் தேசிய ஜக்­கிய கூட்­டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அந்த மோச­டி­கள் குறித்து தேர்­தல் ஆணை­யத்­தி­டம் புகார் அளிக்­க­வுள்­ளோம்," என்­றும் அவர் சொன்­னார்.

மெகா கூட்­ட­ணி­யில் இடம்ெபற்று உள்ள காங்­கி­ரஸ் மற்­றும் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­களும் தேர்­த­லில் முறை­கேடு நடந்­துள்­ள­தாக குற்­றம் சாட்­டி­யுள்­ளன. வாக்கு எண்­ணிக்­கை­யின் இறுதி கட்­டத்­தில் குள­று­ ப­டி­கள் நடந்­துள்­ள­தா­க இட­து­சாரி கட்­சி­கள் கூறின.

இதற்­கி­டையே பீகார் தேர்­த­லில் முறை­கேடு நடந்­துள்­ள­தாக அர­சி­யல் கட்­சி­கள் கூறும் குற்­றச்­சாட்டு­ க­ளுக்கு பதில் அளிக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று தலைமை தேர்­தல் ஆணை­யர் சுனில் அரோரா தெரி­வித்­தார்.

"மக்­கள் முடிவே இறு­தி­யா­னது. வாக்கு எண்­ணிக்கை தொடர்­பான அனைத்து விவ­ரங்­க­ளை­யும் பீகார் தலைமை தேர்­தல் அதி­காரி தெளிவு படுத்­தி­விட்­டார்," என்­றும் சுனில் அரோரா சொன்னார்.