ரூ. 1,000 கோடி பட்டாசுகள் தேக்கம்

ரூ. 1,000 கோடி பட்டாசுகள் தேக்கம்

1 mins read
f7b2f1f5-eae3-405c-b01e-530e32a4a454
-

வகாசி: இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகத்தின் சிவகாசியில் தான் பட்டாசு உற்பத்தி பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. நாட்டின் மொத்த பட்டாசு தயாரிப்பில் சிவகாசியின் பங்கு மட்டும் 80%. இதனை 'குட்டி ஜப்பான்' என்று அழைக்கின்றனர்.

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்ததன் மூலம் ஏற்கெனவே பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டுள்ள சூழலில் பட்டாசு வெடிப்பதால் கொரோனா நோயாளிகளுக்கு சுவாசப் பாதிப்பு ஏற்படும் என்ற புதிய சர்ச்சை இவ்வாண்டு கிளம்பியது.

இதனை மருத்துவர்களும் வலியுறுத்தினர். இதனைக் கருத்தில் கொண்டு டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சண்டிகர், மேற்கு வங்காளம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் பட்டாசு விற்கவும் வெடிக்கவும் தடை விதித்தன.

மேலும் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், ஹரியானா, சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரக்காண்ட், குஜராத், அசாம், தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் அவற்றை குறிப்பிட்ட நேரத்தில்தான் வெடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தீபாவளிக்காக ஏற்கெனவே சிவகாசியில் இருந்து ரூ.2,300 கோடி மதிப்பிலான பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

அதன்பிறகு, தீபாவளி நெருங்கி வந்த நேரத்தில் மாநில அரசுகள் விதித்த தடையால் பட்டாசுகளை விற்க முடியாமல் ரூ.1,000 கோடி அளவிலான பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் கடன் வாங்கி பட்டாசு தயாரித்தோர் செய்வதறியாது விழித்துக்கொண்டிருப்பதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.