படுமோசமான நிலையில் புதுடெல்லியில் காற்றுத் தரம்

படுமோசமான நிலையில் புதுடெல்லியில் காற்றுத் தரம்

2 mins read
45f21672-a6fe-4e35-829a-74a5a22fb826
மக்கள் கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி கண்டபடி தீபாவளி பட்டாசு வெடித்ததால் தலைநகர் புதுடெல்லியிலும் அருகே உள்ள இதர நகர்களிலும் காற்றுத் தரம் படுமோசமாகியது. படம்: ஊடகம் -

இந்­தியா­வின் தலை­நகர் புது­டெல்­லி­யில் காற்­றுத்­த­ரம் மோச­மான நிலையில் இருந்து படு­மோ­ச­மான நிலையை எட்­டி­விட்­டது.

உலக சுகா­தார நிறு­வ­னம் கணித்­துள்ள பாது­காப்­பு அளவை விட 9 மடங்கு அதி­க­மாக காற்று தூய்­மைக்கேடு அடைந்­து­விட்­ட­தால் மக்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் சுமார் 40 சிக­ரெட்­டு­க­ளைப் புகைக்­கும் அள­வுக்­குப் பாதிக்­கப்பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

தீபா­வ­ளிப் பண்­டிகைக்கு அடுத்த நாளான நேற்று வட­இந்தி­யா­வில், குறிப்­பாக தலை­ந­க­ரில் காலையில் தெளி­வாகக் கண் தெரி­யாத அள­வுக்­குப் புகை மண்டி இருந்­தது. தலை­ந­கர் புதுடெல்லியை புகை மூட்­டம் சூழந்­து­விட்­ட­தாக நேற்று ஊட­கங்­கள் தெரிவித்தன.

உல­கில் மோச­மான காற்­றுத் தரத்­தைக் கொண்ட நக­ர்களில் புது­டெல்லி இடம்­பெற்­றுள்­ளது. பொது­வாக அக்­டோ­பர், நவம்­ப­ரில் விவ­சா­யி­கள் வேளாண்­மைக் கழிவு­களை எரிப்­ப­தால் வட இந்­திய நகர்­ களில் காற்­றுத் தூய்­மை கெடும்.

அதி­கா­ரி­கள் எவ்­வ­ளவு நடி­வ­டிக்­கை­களை எடுத்­தா­லும் காற்று தரத்தை நிலை­நாட்ட முடி­ய­வில்லை.

இந்­நி­லை­யில், தீபா­வளி வந்­த­தால் புது­டெல்லியில் பட்­டாசு வெடிக்கக்கூடாது என்று முதல்­வர் கெஜ்ரி­வால் முழு கட்­டுப்­பா­டு­களை விதித்­தார். ஆனால் மக்­கள் அவற்றை மதிக்­காமல் கண்ட கண்ட இடங்களில் கண்­ட­படி யெல்லாம் வெடி­களை வெடித்­த­னர்.

போலி­சார் 10 பேரைக் கைது செய்­த­னர். சுமார் 638 கிலோ பட்டாசு­கள் கைப்­பற்­றப்­பட்­டன.

இருந்­தா­லும் ஏராளமான மக்­கள் வெடி­களை வெடித்­த­தால் பட்­டா­சுப் புகை­யும் காற்­றும் சேர்ந்து காற்­றுத் தரத்தை சனிக்­கி­ழமை மாலை­யில் மோச­ம­டை­யச் செய்துவிட்­டன. இந்­நி­லை­யில், நேற்று காற்­றுத் தரம் மேலும் படு­மோ­ச­ம­டைந்­தது.

சனிக்­கி­ழமை 300 g/m3 என்ற அள­வுக்கு தூய்­மைக்கேடு இருந்­தது. இது நேற்று 543 g/m3 அள­வுக்­குக் கூடி­யது. 60 g/m3 என்­பது பாது­காப்­பான அள­வா­கும்.

சுமார் 20 மில்­லி­யன் பேர் (2 கோடி) வசிக்­கும் தலை­ந­க­ரில் 400,000 பேருக்­கும் அதிக மக்­க­ளுக்கு கொவிட்-19 தொற்று இருப்ப தாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

காற்றுத் தரம் கெட்­டு­விட்­ட­தால் இந்த நோயாளிகளின் கதி என்ன ஆகுமோ என்ற கவலை அதிகமாகக் கூடி­விட்­டது.