பாஜகவைச் சேர்ந்த இருவருக்கு துணை முதல்வர் பதவி; மீண்டும் பீகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார்

2 mins read
f0240079-4611-42c7-81ac-26a7e524e7cf
நிதிஷ்­கு­மார். படம்: ஊடகம் -

பீகார் மாநி­லத்­தின் 37வது முதல்­வ­ராக நிதிஷ்­கு­மார் பதவி யேற்­றார். அவ­ருக்­கும் அவ­ரது அமைச்­சர்களாகப் பொறுப்பேற்க உள்ள 13 பேருக்­கும் ஆளு­நர் பாகு சௌஹான் நேற்று மாலை பத­விப் பிர­மா­ண­மும் ரக­சிய காப்­புப் பிர­மா­ண­மும் செய்­து­வைத்­தார்.

இந்நிகழ்­வில், மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷாவும் பாஜக தேசி­யத் தலை­வர் ஜெகத் பிர­காஷ் நட்­டா­வும் பங்­கேற்­ற­தாக ஏஎன்ஐ ஊட­கம் தெரி­வித்­தி­ருந்­தது.

இந்நிலையில், பீகா­ரில் இரு வரை துணை முதல்­வர் பத­வி­யில் நிய­மிக்க பாஜக முடிவு செய்­து, அதன்படி தார்­கி­ஷோர் பிர­சாத், ரேணு­தேவி ஆகி­ய இருவருக்கும் துணை முதல்­வர் பதவி வழங்­கப்­பட்டுள்ளதா­க­வும் அர­சி­யல் வட்­டா­ரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்­கி­டையே, தனது தேர்­தல் தோல்­விக்கு ராகுல் காந்­தி­யும் பிரி­யங்கா காந்­தி­யும்­தான் கார­ணம் என்று ராஷ்­டி­ரிய ஜனதா தளம் கட்­சி­யின் தேஜஸ்வி யாதவ் குற்­றம்­சாட்டி உள்­ளார்.

பீகார் மாநி­லத்­தில் அண் மையில் நடை­பெற்ற தேர்­த­லில் முன்­னாள் முதல்­வர் லாலு பிர­சாத் யாத­வின் மகன் தேஜஸ்வி யாதவ் மகத்­தான வெற்­றி­பெற்று முதல்வ ராவார் என்று பல­ரும் எதிர்­பார்த்­த­னர். ஆனால், 15 இடங்­கள் குறை­வா­கப் பெற்­ற­தால் அவ­ரது வெற்றி கைந­ழுவி உள்­ளது.

இந்­நி­லை­யில், பீகா­ரில் 70 இடங்­களில் போட்­டி­யிட்ட காங்­கி­ரஸ் 70 பொதுக்­கூட்­டங்­க­ளைக் கூட நடத்­த­வில்லை என்­றும் தேர்­தல் பணி­கள் மலைபோல் குவிந்திருந்த நேரத்­திலும் ராகுல் ­காந்தி சிம்­லா­வுக்கு கடற்கரை பயணம் சென்­று­வந்­தார் என்­றும் அவர் மூன்று நாட்­கள் மட்­டுமே பீகா­ரில் பிர­சா­ரம் செய்­தார் என்­றும் தேஜஸ்வி கூறியுள்ளார்.

அதே­போல், பிரி­யங்கா காந்தியும் தேர்­தல் பிர­சா­ரத்திற்கு வரவில்லை என்­றும் காங்­கி­ர­சின் மெத்­த­னத்­தால்­தான் பீகா­ரில் தங்­கள் கூட்­டணி தோல்வி அடைந்­த­தா­க­வும் ராஷ்ட்­ரிய ஜனதா தளம் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.

இதற்­கி­டையே, "மீண்டும் பீகார் முதல்வராகும் நிதிஷ்­கு­மாரால் சுதந்­ தி­ர­மாகச் செயல்­பட வாய்ப்பில்லை. பாஜகவே தனது கைப்பாவையாக நிதீஷ்­குமாரை பின்­னால் இருந்து ஆட்டிப் படைக்கும்," என்­று காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் தாரிக் அன்­வர் விமர்­சித்­துள்­ளார்.