பெண் வீசிய ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை குப்பையில் தேடிக் கண்டுபிடித்த ஊழியர்கள்

1 mins read
00d909ae-88ba-41e9-b492-5f16761cd60e
குப்பையில் வீசப்பட்ட நகைகளைத் தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். படம்: ஊடகம் -

மகா­ராஷ்­டிர மாநி­லம், புனே­யில் வசிக்­கும் ரேகா செலு­கார் என்ற பெண், தீபா­வ­ளித் திரு­நாளை முன்­னிட்டு தனது வீட்டைச் சுத்­தப்­ப­டுத்­தும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­தார்.

அப்­போது, வீட்­டில் இருந்த தேவை­யற்ற பொருட்களை எல்­லாம் குப்­பைத் தொட்­டி­யில் எறிந்­த­வர், தனது நகை­களைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் கைப்பையையும் குப்­பை­யோடு குப்பையாக எறிந்­துள்­ளார்.

தீபா­வ­ளி­யின்­போது, நகை­களை அணிந்­து­கொள்ள நினைத்­த­போ­து­தான், ரேகா செலு­கா­ருக்குத் தான் செய்த இந்தத் தவறு நினை­வுக்கு வந்­தது. இதன்­பின்­னர் அவர் புனே மாந­க­ராட்­சி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, ரூ.3 லட்ச ரூபாய் மதிப்­புள்ள தங்­கம், வெள்ளி நகை­களை வைத்திருந்த கைப் பையை மற­தி­யாக குப்பை லாரி­யில் போட்­டு­விட்­டது பற்றி கூற, அதி காரிகள் அப்பகு­திக்கு வந்து சென்ற லாரி எந்த குப்­பைக் கிடங்­குக்குச் சென்­றி­ருக்­கும் என்­ப­தைக் கணித்து அங்கு சென்று தேடி­னர். நீண்ட நேர தேட­லுக்­குப் பின் அந்த கைப்பையும் அதி­லி­ருந்த நகை­களும் பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­டன. இதை­ய­டுத்து, ரேகா அதிகாரி களுக்கு மனதார நன்றி சொன்னார்.