இந்தியாவிற்காக வேவு பார்த்ததாகக் கூறி 2012ஆம் ஆண்டு பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட ஷம்சுதீன், 70, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தமது சொந்த ஊருக்குத் திரும்பினார்.
கடந்த 1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற அவர், ஈராண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டின் குடிமகனானார்.
ஆனால், குடியேறிகள் அங்கு சரியாக நடத்தப்படுவதில்லை என்றும் பாகிஸ்தானியர்கள் இந்தியர்களை எதிரிகளாகப் பார்ப்பதாகவும் ஷம்சுதீன் சொன்னார்.
தாம் பாகிஸ்தானுக்குச் சென்றது பெருந்தவறு என்றும் அவர் குறிப்பிட்டார்.