6 சிறுவர்கள் உட்பட 14 பேர் மரணம்; திருமணத்துக்கு சென்று திரும்பியவர்களின் கார் லாரி மீது மோதி பயங்கர விபத்து

6 சிறுவர்கள் உட்பட 14 பேர் மரணம்; திருமணத்துக்கு சென்று திரும்பியவர்களின் கார் லாரி மீது மோதி பயங்கர விபத்து

1 mins read
08bc910c-1638-4506-a4ca-96c6ee943f54
படம்: ஊடகம் -

உத்தரப்பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் பலியாகினர். திருமண நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

குண்டா எனும் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் ஒரு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

பிரதாப்கர் என்ற இடத்துக்கு அருகில் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, சக்கரம் வெடித்ததில், அந்த கார் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் மோதியது.

காரில் இருந்த 6 குழந்தைகள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் பெரிதும் சேதமடைந்தது.

சம்பவத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்