ஊரையே வளைத்த கொரோனா; ஒருவர் மட்டும் தப்பினார்

ஊரையே வளைத்த கொரோனா; ஒருவர் மட்டும் தப்பினார்

1 mins read
2c1573e5-66da-4d85-bf3b-2cc612c65e6e
படம்: ஊடகம் -

இமாச்சலப் பிரதேச மாநிலம், தோரங் எனும் சிற்றூரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரையும் கொரோனா தொற்றியது.

மணாலி-லே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அவ்வூரில் இப்போது 42 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர்.

சில நாள்களுக்குமுன் சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர்கள், அதன்பின் தாங்களாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

முன்னெச்சரிக்கையாகத் தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்ட பூஷன் தாக்குர் எனும் 52 வயது ஆடவர் மட்டும் கொரோனா பிடியிலிருந்து தப்பினார்.