டெல்லி அரசு தீவிர நடவடிக்கை; தலைநகரில் மூன்றாம் அலை பரவும் அச்சம்

டெல்லி அரசு தீவிர நடவடிக்கை; தலைநகரில் மூன்றாம் அலை பரவும் அச்சம்

2 mins read
53abb3cd-408f-4022-b630-f49d62782778
டெல்லியில் பரி­சோ­திக்­கப்­படும் நூறு பேரில் 15 பேரிடம் கொரோனா நுண்கிரு­மி பாதிப்பு இருப்பதாகக் கண்­ட­றி­யப்படுகிறது. படம்: ஊடகம் -

இந்­தி­யத் தலை­ந­கர் புது­டெல்­லி­யில் ஏற்­கெ­னவே கொரோனா கிருமி பாதிப்­பின் இரண்­டா­வது அலை­யால் மக்­கள் அல்­லல்­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­தப் பாதிப்பு அடுத்­த­கட்ட மூன்­றா­வது அலையை உரு­வாக்கி விடு­வ­தைத் தடுக்க மத்­திய அர­சும் கெஜ்­ரி­வால் தலை­மை­யி­லான டெல்லி நகர அர­சும் கடு­மை­யா­கப் போராடி வரு­வ­தா­க­வும் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

இந்­நி­லை­யில், டெல்­லி­யில் தொற்று பாதிப்­பின் மூன்­றா­வது அலை தற்போதே பரவி வருவதாக வும் தக­வல்கள் பகிரப்படுவதால் பொது­மக்­கள் அச்­ச­ம­டைந்துள்ளனர்.

இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களின் எண்­ணிக்கை மீண்­டும் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யுள்­ளது.

நாடெங்­கும் கடந்த 24 மணி நேரத்­தில் 46,268 பேர் பாதிக்­கப்­பட்டுள்­ள­னர். கடந்த ஒன்­பது நாள்­களில் இது அதி­க­பட்ச பாதிப்­பு.

இது­வரை இந்­தியா முழு­வ­தும் 90,50,597 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்­ள மத்­திய சுகா­தார அமைச்­ச­கம், கடந்த 24 மணி நேரத்­தில் நாடெங்­கும் 560 பேர் உயி­ரி­ழந்ததாகவும் இது­வரை மர­ணம் அடைந்­தவர்களின் எண்­ணிக்கை 132,726 பேராக அதி­க­ரித்­துள்­ளதாகவும் கூறியுள்ளது.

டெல்லி­யில் கடந்த 24 மணி நேரத்­தில் 7,546 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் 98 பேர் பலி­யாகி உள்­ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இத­னால், பொது­மக்­க­ளுக்கு பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்டுள்­ளன. திரு­மண விழா­வில் 50 பேர் மட்­டுமே கலந்து கொள்­ள­வேண்­டும், கூட்டம் கூடு வதை தவிர்க்கவேண்டும் எனவும் டெல்லி அரசு அறி­வு­றுத்தியுள்­ளது.

ராஜஸ்­தான், அரி­யானா மாநி­லங்­க­ளி­லும் இது­வரை இல்­லாத அள­வுக்கு இந்­தக் கிருமி பாதிப்பு புதிய உச்­சத்தை எட்­டி­யுள்­ளது.

நாட்­டி­லேயே மிக மோச­மான நிலை­யில் பாதிக்­கப்­பட்ட மகா­ராஷ்­டிரா மாநி­லம் கொரோனா பாதிப்­பில் இருந்து மீண்டு வருகிறது.

இந்­நி­லை­யில், டெல்­லி­யில் பர­விய இரண்­டாம் அலை மகா­ராஷ்­டி­ரா­வி­லும் பர­வும் என்ற அச்­சம் நில­வு­வதால் டெல்லி-மும்பை இடை­யி­லான 45 விமா­னங்­கள், நூற்­றுக்­க­ணக்­கான ரயில்­க­ளைக் குறைப்­பது குறித்து மகா­ராஷ்­டிரா மாநில அரசு பரி­சீ­லித்து வரு­கிறது.