பாலியல் தொந்தரவு: வீதி நெடுக தோப்புக்கரணம், அடி, உதை

1 mins read
51e16530-4e2a-44ce-8da6-92a002414c5e
சமூக ஊடகக் காணொளிப் படம் -

மத்­திய பிர­தேச மாநி­லத்­தில் உள்ள தேவாஸ் நக­ரில் இளை­ஞர்­கள் பெண்­க­ளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் வந்­த­தை­ய­டுத்து போலி­சார் விரைந்து சென்று இரு இளை­யர்­க­ளைப் பிடித்து கைது செய்­த­னர். வீதியில் நடக்­க­விட்டு அழைத்­துச் சென்­ற­போது அவர்­களை தோப்­புக்­க­ர­ணம் போடச்­சொன்­னார்­கள்.

இரு­வ­ரும் வீதியில் தோப்­புக்­

க­ர­ணங்­களைப் போட்­ட­வாறு நடந்து சென்­ற­னர். அதே நேரம் அவர்­க­ளின் பின்­பு­றத்­தில் ஆண், பெண் போலி­சார் தடி­யால் அடித்­த­வாறே இரு இளை­யர்­களை போலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்­துச் சென்­ற­னர். இதனை சுற்­று­வட்­டா­ரத்­தில் இருந்த மக்­கள் வியப்­பு­டன் பார்த்­த­னர். இச்­சம்­ப­வத்தை சிலர் காணொ­ளி­யாக எடுத்து சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றி­விட்­ட­னர்.

'சரி­யான தண்­டனை' என போலி­சா­ரின் செய­லுக்கு பெண்­கள் ஆத­ர­வ­ளித்­த­போ­தி­லும் வீதியில் இளை­யர்­களை அவ­மா­னப்­ப­டுத்­தி­ய­தாக சமூக ஆர்­வ­லர்­கள் கண்­ட­னம் தெரி­வித்­த­னர்.

குறிப்புச் சொற்கள்