தங்கக் கடத்தல்: சிவசங்கரைக் கைது செய்த சுங்கத்துறையினர்

தூத­ர­கம் வழி­யா­கத் தங்­கம் கடத்தி வரப்­பட்ட வழக்­கில் பணி­யி­டை­நீக்­கம் செய்­யப்­பட்ட ஐஏ­எஸ் அதி­கா­ரி­யும் கேரள முதல்­வரின் முன்­னாள் முதன்­மைச் செய­ல­ரு­மான சிவ­சங்­கரை சுங்­கத்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

தங்­கக் கடத்­தல் வழக்­கில் சிவ­சங்­க­ருக்­குத் தொடர்பு இருந்­த­தற்­கான சான்­றைச் சுங்­கத்­து­றை­யி­னர் சமர்ப்­பித்­ததை அடுத்து, அவ­ரைக் கைது செய்ய எர்­ணா­கு­ளம் மாவட்ட நீதி­மன்­றம் நேற்று முன்­தி­னம் அனு­மதி வழங்­கி­யது.

இத­னி­டையே, கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­றி­ய­தற்­கும் தங்­கக் கடத்­தல் கும்­ப­லுக்­கும் தொடர்­பி­ருப்­பது குறித்து அம­லாக்­கத் துறை விசா­ரித்து வரு­கிறது. தங்­கக் கடத்­தல் நட­வ­டிக்­கை­க­ளின் மூளை­யாக சிவ­சங்­கர் செயல்­பட்­டி­ருக்­க­லாம் என்று அம­லாக்­கத் துறை கூறி­யி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அம­லாக்­கத் துறை­யால் கடந்த மாதம் 29ஆம் தேதி கைது செய்­யப்­பட்ட சிவ­சங்­கர், எர்­ணா­கு­ளம் மாவட்­டச் சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ளார்.

இதை­ய­டுத்து, நேற்று அந்தச் சி­றைச்­சா­லைக்­குச் சென்ற சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள், தங்­க­ளா­லும் அவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக முறைப்­படி பதி­வு­செய்­த­னர்.

இவ்­வே­ளை­யில், சிவ­சங்­கர் தாக்­கல் செய்­துள்ள பிணை மனு தொடர்­பில் கருத்­து­ரைக்­கும்­படி அம­லாக்­கத் துறை­யைக் கேரள உயர் நீதி­மன்­றம் கேட்­டுள்­ளது. குறிப்­பிட்ட சில வாட்ஸ்­அப் குறுஞ்­செய்­தி­களை மட்­டும் தேர்வு செய்து நீதி­மன்­றத்­தில் முன்­வைத்து, தவ­றாக வழி­ந­டத்தி, தங்­கக் கடத்­தல் வழக்­கில் தம்­மைச் சிக்­க­வைக்க அம­லாக்­கத் துறை முயன்று வரு­வதாக சிவ­சங்­கர் தமது மனு­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

அவ­ரது பிணை மனு குறித்த வழக்கு அடுத்த மாதம் 2ஆம் தேதி மீண்­டும் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!