‘தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிப்பது ஆபத்தானது’

வங்­கி­கள் தொடங்க தனி­யார் நிறு­வ­னங்­கள், வணிக நிறு­வ­னங்­க­ளுக்கு அனு­மதி அளித்­தால் அவை சிறு பங்கை முத­லீடு செய்­து­விட்டு நாட்­டின் நிதியைக் கட்­டுப்­ப­டுத்­தும் அள­வுக்­குச் சென்­று­வி­டும் என்று இந்­தி­யா­வின் முன்­னாள் நிதி அமைச்­சர் ப.சிதம்­ப­ரம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

மேலும், வங்­கி­கள் தொடங்­கும் உரி­மத்தை யார் பெறு­வார்­கள் என்பது அனை­வ­ரும் அறிந்த ரக­சி­யம். அர­சி­யல் தொடர்­பு­டைய பெரும் கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்­குத்­தான் உரி­மம் கிடைக்­கும். இவை, வங்­கி­க­ளைக் கைக்­குள் போட்­டுக்­கொள்­ளும் சதித்­திட்­டம்.

வணிக நிறு­வ­னங்­க­ளின் பிடி­யில் இருந்து வங்­கி­கள் மீட்­கப்­பட்டு 50 ஆண்­டு­கள் ஆகின்­றன.

இந்த ஐம்­பது ஆண்­டு­களில் பெறப்­பட்ட எண்­ணற்ற நன்­மை­களை, இந்த யோசனை சீர்­குலைத்துவிடும். எனவே, மத்­திய அர­சின் இந்த யோச­னையை அனை­வ­ரும் எதிர்க்க வேண்­டும்,” என வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

வங்­கி­கள் ஒழுங்­கு­முறை சட்­டத்­தில் உரிய திருத்­தங்­களைச் செய்த பிறகு பெரு­நி­று­வ­னங்­களும், தொழில் நிறு­வ­னங்­களும் வங்­கி­கள் தொடங்க அனு­ம­திக்­க­லாம் என நிபு­ணர் குழு பரிந்­து­ரைத்­தது. அத­னை­ய­டுத்து திரு ப.சிதம்­ப­ரம் இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­துள்­ளார். ப.சிதம்­ப­ரத்­தின் இந்த பேச்சு சமூக ஊட­கங்­களில் பரவி வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!