தப்பிய தமிழகத்துக்கு அடுத்த புயல் மிரட்டல்

வங்­கக் கட­லில் அதி பயங்­கர புயலாக உரு­வான நிவர் பேரி­ட­ரில் இருந்து தமி­ழ­கம் தப்­பி­விட்­டது. அந்­தப் புயல் எதிர்­பார்க்­கப்­பட்டதைப் போல் கரை­யே­றா­மல் வலு­வி­ழந்­து­விட்­ட­தால் பெரும் பாதிப்­பில் இருந்து அந்த மாநி­லம் தப்பிவிட்டது.

ஆனால் நிம்­மதிப் பெரு­மூச்சு விடு­வ­தற்­குள் அடுத்த மிரட்­டல் உரு­வாகி இருப்­ப­தால் மாநி­லம் மீண்­டும் பர­ப­ரப்­பாகி உள்ளது.

நிவர் புயல் நேற்று அதி­காலை நேரம் புதுச்­சேரி அருகே கரையைக் கடந்­தது. இருந்தாலும் அதற்கு முன்­பா­கவே அது வலு­விழந்­து­விட்­டது.

மாநி­லத்­தின் பல பகு­தி­க­ளி­லும் கடு­மை­யான மழை­யை­யும் சூறா வளிக் காற்­றை­யும் ஏற்­ப­டுத்­திய நிவர், மீண்­டும் காற்­ற­ழுத்­தத் தாழ்வு மண்­ட­ல­மாக மாறி வடக்குப் பகுதிக்குச் சென்று மேலும் வலுவிழந்துவிடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்­னு­ரைத்­தது.

இந்­தப் புயல் கார­ண­மாக தமிழ்­நாட்­டில் மூன்று பேர் மாண்­டு­விட்­ட­னர்; மூன்று பேர் காய­ம­டைந்­தனர்; 101 குடி­சை­கள் சேத­மடைந்­தன; 380 மரங்­கள் சாய்ந்தன.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை­யாக மாநி­லத்­தில் மொத்­தம் 145,000 பேர் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டு 1,516 நிவா­ரண முகாம்­க­ளுக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தா­க தமிழ்­நாடு பேரி­டர் நிர்­வா­கத் துறை அமைச்­சர் உத­ய­கு­மார் கூறினார்.

நிவர் புய­லின் பாதிப்பு கடு­மை­யாக இருக்­கும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்டு இருந்­த­தால் மாநி­லத்­தில் பேருந்து, ரயில் சேவை­கள் நிறுத்­தப்­பட்­டன. இரண்டு நாட்­கள் பொது விடு­முறை அறி­விக்கப்பட்டது.

புய­லைச் சமா­ளிக்க மத்­திய அர­சாங்­கம் அனைத்து உத­வி­களுக்­கும் உறுதி கூறி இருந்­தது. பல படை­களும் தயார் நிலை­யில் இருந்­தன. பல­ரும் பாராட்­டும் அள­விற்கு தமி­ழக அர­சு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

இருந்தாலும் புயல் பாதிப்பு முன்னுரைக்கப்பட்ட அளவுக்கு இல்லை. புயல் தாக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட கட­லோர மாவட்­டங்­களில் பல இடங்­க­ளி­லும் நேற்று வழக்கநிலை திரும்­பி­விட்­டது. மழை ஓய்ந்து வெயில் அடிக்­கத் தொடங்­கி­யது. புயல் கார­ண­மாக மூடப்­பட்ட சென்னை விமான நிலையம் நேற்­றுக் காலை முதல் செயல்­படத் தொடங்­கி­யது.

இவ்­வே­ளை­யில், வரும் 29ஆம் தேதி வங்­கக் கட­லின் தென்­கி­ழக்­குப் பகு­தி­யில் புதிய காற்­ற­ழுத்­தத் தாழ்­வு­நிலை உரு­வாக வாய்ப்­புள்­ள­தா­க­வும் அந்­தத் தாழ்­வு­நிலை தாழ்வு மண்­ட­ல­மாக மாறி புய­லாக மாறு­வ­தற்­கான வாய்ப்­பு­களும் உண்டு என்­றும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்­ச­ரித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!