இந்தியாவின் பொருளியல் 7.5% சரிவு

இந்தியாவின் பொருளியல் 7.5% சரிவு

1 mins read
2fafb1dd-d8e6-4695-9bee-68b3a92b1e18
படம்: ஏஎஃப்பி -

கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, முடக்கநிலை ஆகியவற்றால் கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இந்தியாவின் பொருளியல் 23.9 விழுக்காடு வீழ்ச்சியை சந்தித்தது.

அதைத் தொடர்ந்து, நாட்டின் பொருளியலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு கட்டுப்பாடு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.

தொழில், வர்த்தக துறைகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் விளைவாகப் பொருளியல் சரிவிலிருந்து மீள முடியாவிட்டாலும்கூட சரிவின் அளவு குறைந்து இருப்பது, மீள்வதற்கான அறிகுறியாக அமைந்து ஆறுதல் அளிப்பதாக இந்தியப் பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்

அந்த வகையில் கடந்த ஜூலை-செப்டம்பர் மாதங்களில் பொருளியல் 7.5 விழுக்காடு சரிவை மட்டுமே சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பொருளியல் 4.4 விழுக்காடு வளர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்