கொரோனா தடுப்பு விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு; மருந்து தயாரிப்பு நிலையங்களைப் பார்வையிட்ட பிரதமர் மோடி

இந்­தி­யா­வில் கொரோனா தடுப்­பூசி உற்­பத்தி செய்ய ஏழு நிறு­வ­னங்­க­ளுக்கு மத்­திய மருந்து தரக்­கட்­டுப்­பாட்டு அமைப்பு அனு­மதி அளித்­துள்­ளது.

அந்த நிறு­வ­னங்­க­ளின் தடுப்­பூ­சியை மனி­தர்­க­ளி­டம் பரி­சோ­தித்து பார்க்கும் பணி, இரண்­டா­வது மற்­றும் மூன்­றா­வது கட்­டங்­களில் இருக்­கிறது.

இந்­நி­லை­யில், கொரோனா தடுப்­பூசி உற்­பத்தி செய்­யும் மூன்று நிறு­வ­னங்­க­ளுக்கு இந்­தி­யப் பிர­த­மர் மோடி நேற்று சென்­றார்.

முதல் கட்­ட­மாக குஜ­ராத் மாநி­லம் அக­ம­தா­பாத் அருகே சாங்­கோ­தர் தொழிற்­பேட்­டை­யில் அமைந்­துள்ள ஸைடஸ் காடிலா நிறு­வன ஆலைக்கு நேற்று காலை நேரில் சென்­றார். அங்கு அந்­நி­று­வ­னம் தயா­ரிக்­கும் ‘ஸைகோவ்-டி’ தடுப்­பூ­சி­யின் இரண்­டா­வது கட்ட பரி­சோ­தனை நடந்து வரு­கிறது. அதன் முன்­னேற்­றம் குறித்து மோடி கேட்­ட­றிந்­த­தோடு, தடுப்­பூசி உற்­பத்திப் பணி­க­ளைப் பார்­வை­யிட்­டார்.

ஸைடஸ் கெடிலா நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி, நிர்­வா­கி­கள், ஆராய்ச்­சி­யா­ளர்­கள் ஆகி­யோ­ரு­டன் கொரோனா தடுப்பு மருந்து தயா­ரி்­க்­கும் பணி, பரி­சோ­தனை நில­வ­ரம் உள்­ளிட்ட விஷ­யங்­கள் குறித்து பிர­த­மர் மோடி கேட்­ட­றிந்­தார்.

பிபிஇ ஆடை அணிந்து, முகக்­க­வ­சம் அணிந்து நிறு­வ­னத்­துக்­குள் சென்ற பிர­த­மர் மோடி, கொரோனோ தடுப்பு மருந்­துப் பணி­களை நேரில் ஆய்­வு­செய்­தார்.

அப்­போது பிர­த­மர் மோடி­யி­டம் கொரோனா தடுப்புப் பணி­கள், பரி­சோ­த­னை­யின் கட்­டம் ஆகி­ய­வற்றை ஆராய்ச்­சி­யா­ளர்­கள் விளக்­கி­னர்.

அவர்­க­ளி­டம் பிர­த­மர் மோடி­யும் பல்­வேறு சந்­தே­கங்­க­ளைக் கேட்டு விளக்­கம் பெற்­றார் என்று அதி­காரி­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கெடிலா நிறு­வ­னத்­தின் சார்­பில் கொரோனா தடுப்பு மருந்து மக்­க­ளின் பயன்­பாட்­டுக்கு வரும் எனத் தெரி­கிறது.

“அக­ம­தா­பாத்­தில் உள்ள ஸைடஸ் கெடிலா பயோ­டெக் பார்க் நிறு­வ­னத்­துக்குச் சென்­றேன். அங்கு கொரோனா கிரு­மிக்கு எதி­ராக உள்­நாட்­டி­லேயே மர­பணு அடிப்­ப­டை­யாக வைத்து தயா­ரிக்­கப்­படும் தடுப்பு மருந்து குறித்த விவ­ரங்களைக் கேட்­ட­றிந்­தேன்.

“இந்த பணிக்குப் பின்­பு­லத்­தில் இருக்­கும் ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு என்­னு­டைய பாராட்­டு­கள். இந்த மருந்து தயா­ரிக்­கும் குழு­வின் பய­ணத்­துக்கு அரசு தேவை­யான உத­வி­களை அளித்து துணை­யாக இருக்­கும்” என்று பிர­த­மர் மோடி டுவிட்­ட­ரில் பதி­விட்­டார்.

ஏறக்­கு­றைய ஒரு மணி­நே­ரம் ஸைடஸ் கெடிலா நிறு­வ­னத்­தில் இருந்த பிர­த­மர் மோடி இந்­திய நேரப்­படி காலை 11.30 மணிக்கு அங்­கி­ருந்து ஹைத­ரா­பாத்­துக்­குப் புறப்­பட்­டார். ஹைத­ரா­பாத்­தில் உள்ள பாரத் பயோ­டெக்­கில் தயா­ரிக்­கப்­படும் உள்­நாட்டு தடுப்­பூசி குறித்து பிர­த­மர் மோடிக்கு விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.

“இது­வரை நடை­பெற்ற சோத­னை­களில் வெற்­றி­கண்ட விஞ்­ஞா­னி­க­ளுக்கு எனது மன­மார்ந்த வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். விரை­வான முன்­னேற்­றத்தை எளி­தாக்க பாரத் பயோ­டெக்­கைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­கள் இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்­றத்­து­டன் நெருக்­க­மாக செயல்­பட்டு வரு­கின்­ற­னர்,” என்று பிர­த­மர் மோடி டுவிட்­ட­ரில் பதி­விட்­டார்.

இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பலர் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் அதற்­கான தடுப்­பூ­சி­யைக் கண்­டு­பி­டிக்க இந்­திய விஞ்­ஞா­னி­கள் விரை­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!