பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்: 5 வயது சிறுமியின் நடுக்கடல் விழிப்புணர்வு முயற்சி

மும்பை: பெண் குழந்­தை­க­ளைப் பாது­காப்­பது பற்றிய விழிப்புணர்வை ஏற்­ப­டுத்த மும்பை சிறப்­புப் படை போலிஸ் பிரி­வைச் சேர்ந்த போலிஸ் அதி­காரி ஒரு­வ­ரு­டைய மக­ளான 5 வயது உர்வி நூதன முயற்சி ஒன்­றில் ஈடு­பட்­டார்.

பெண் குழந்­தை­க­ளைப் பாது­காப்­பது மிக­வும் முக்­கி­யம் என்­பதை மக்­க­ளுக்கு எடுத்­து­ரைக்­கும் வகை­யில் தமது பிறந்­த­நாள் கொண்­டாட்­டம் அமைய வேண்­டும் என்று உர்வி விரும்­பி­னார்.

இதைப் பற்றி அவர் தமது தந்­தை­யி­டம் தெரி­விக்க அதற்­கான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டன.

வித்­தி­யா­ச­மான முறை­யில் நடு­க் க­ட­லில் பிறந்­த­நாளைக் கொண்­டாட முடிவு செய்­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து, உர்வி, அவ­ரது பெற்­றோர், அவர்­க­ளுக்கு நெருக்­க­மான சிலர் ஆகி­யோர் அர்­னாலா கடற்­க­ரை­யி­லி­ருந்து படகு மூலம் 3.6 கிலோ மீட்­டர் தூரம் கட­லுக்­குள் சென்­ற­னர்.

உயிர்­காக்­கும் மித­வை­களை அணிந்­து­கொண்டு தமது தந்­தை­யு­டன் உர்வி கட­லில் இறங்­கி­னார்.

தெர்­மோ­கால் உத­வி­யு­டன் கேக்கை கட­லில் மிதக்க விட்டு அதனை வெட்டி பிறந்­த­நாளை கொண்­டா­டி­னார். உர்வி வெட்­டிய கேக்­கில் ‘பெண் குழந்­தை­களைக் காப்­பாற்­றுங்­கள்’ என்ற வரி­கள் இடம்­பெற்று இருந்­தன. 5 வயது சிறுமியின் இந்தச் சமூக அக்கறை கொண்ட செயலுக்குப் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!