திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து விபரம்: வெள்ளை அறிக்கை வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து விபரம்: வெள்ளை அறிக்கை வெளியீடு

1 mins read
7760776f-6c16-4f80-ad7f-6580ded82e88
படம்: இந்திய ஊடகம் -

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து குறித்த விவரம் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நிகர சொத்தாக 7,754 ஏக்கர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்கள் 1,793 ஏக்கரும், மற்ற நிலங்கள் 5,964 ஏக்கரும் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1974ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பக்தர்கள் வழங்கிய சொத்தில் 335 ஏக்கர் விற்கப்பட்டு 6.13 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்