கார் பட்டை எண்ணை ரூ.34 லட்சத்துக்கு ஏலம் எடுத்த இளையர்; அப்படி என்ன சிறப்பு அந்த எண்ணுக்கு?

கார் பட்டை எண்ணை ரூ.34 லட்சத்துக்கு ஏலம் எடுத்த இளையர்; அப்படி என்ன சிறப்பு அந்த எண்ணுக்கு?

1 mins read
559b1c2e-4800-4af3-9517-b0e0ea86ff22
ஆஷிக், தனது டொயோடா ஃபார்ச்சூனர் காருக்கு GJ01WA007 என்ற எண்ணை ஏலம் எடுத்தார். படம்: இந்திய ஊடகம் -

அகமதாபாத்தைச் சேர்ந்த ஆஷிக் படேல் எனும் 28 வயது இளையர், அண்மையில் அகமதாபாத்தின் ஆர்டிஓ அலுவலகத்தில் '007' என்ற 'ஃபேன்சி' கார் பட்டை எண்ணை ஏலத்தில் எடுத்துள்ளார்.

அதற்கு அவர் கொடுத்த விலை 34 லட்ச ரூபாய்.

ஒரு சொகுசு காரின் விலையில் கார் பட்டை எண்ணா என்கிறீர்கள?

அது அவருக்கு மிகவும் பிடித்தது மட்டுமல்ல, அதிர்ஷ்ட எண்ணாம்.

இம்மாதம் 23ஆம் தேதி ஆஷிக், தனது டொயோடா ஃபார்ச்சூனர் காருக்கு GJ01WA007 என்ற எண்ணை பதிவுசெய்ய முன்வந்துள்ளார்.

இந்த 'ஃபேன்ஸி' எண்ணுக்கான ஏலம் ரூ.25,000ல் தொடங்கியது.

ஆஷிக்கைப் போலவே மற்றொருவரும் இந்த எண்ணுக்காக போட்டி போட்டு ஏலம் கேட்டதாகத் தெரிகிறது.

சில மணி நேரம் தொடர்ந்த ஏலத்தில் இரவு சுமார் 11.55 மணியளவில் ஆஷிக் அந்த எண்ணை 34 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்