சவூதியில் இந்தியர் குத்திக்கொலை

சவூதியில் இந்தியர் குத்திக்கொலை

1 mins read
ad73c5cc-fd64-41eb-a9cd-af4819c7d009
சவூதியில் வேலை பார்த்து வந்த கேரள ஆடவர் அப்துல் அஸீஸை பாகிஸ்தானைச் சேர்ந்த ஆடவர் குத்திக் கொலை செய்தார். படம்: கேரள ஊடகம் -

சவூதி அரேபியாவில் இந்திய ஆடவர் ஒருவரைப் பாகிஸ்தானியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாண்டவர் கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் அஸீஸ்.

அவர் ஜெத்தாவில் உள்ள மருந்து நிறுவனமொன்றில் பராமரிப்பு மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார்.

தனிப்பட்ட பகையே அஸீஸின் கொலைக்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

அப்துல் அஸீஸைக் காப்பாற்ற முயன்ற இன்னொரு கேரள ஆடவரும் பங்ளாதேஷ் ஆடவர் ஒருவரும் காயமடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்