விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை

புதிய வேளாண் சட்­டங்­களை ரத்து செய்­யக் கோரும் விவ­சா­யி­க­ளின் போராட்­டம் நேற்று ஆறா­வது நாளை எட்­டி­யதை அடுத்து, மத்­திய அமைச்­சர்­கள்-விவ­சா­யச் சங்­கங்­க­ளின் பிர­தி­நிதி­க­ளுக்கு இடையே டெல்­லி­யில் நேற்றுப் பிற்பகலில் பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது.

மத்­திய வேளாண் அமைச்­சர் நரேந்­திர சிங் தோமர், வர்த்­தக, தொழில் அமைச்­சர் பியூஷ் கோயல், வர்த்­தக, தொழில் இணை அமைச்­சர் சோம் பர்­காஷ் ஆகி­யோர் அர­சாங்­கத் தரப்­பில் பங்­கேற்­ற­னர்.

முன்­ன­தாக, பஞ்­சாப்­பைச் சேர்ந்த 32 விவ­சா­யச் சங்­கங்­கள் உட்­பட மொத்­தம் 36 விவ­சா­யச் சங்­கங்­கள் அர­சாங்­கம் விடுத்த அழைப்பை ஏற்று பேச்­சு­வார்த்­தை­யில் பங்­கேற்க ஒப்­புக்­கொண்­டன. அதே நேரத்­தில், புதிய வேளாண் சட்­டங்­களை ரத்து செய்ய வேண்­டும் எனும் தங்­க­ளது கோரிக்­கை­யில் எந்த மாற்­ற­மும் இல்லை என அவை வலி­யு­றுத்தி இருந்­தன.

அதே வேளை­யில், பஞ்­சாப்­பின் ‘விவ­சா­யத் தொழி­லா­ளர் போராட்­டக் குழு’ பேச்­சு­வார்த்­தை­யில் இடம்­பெற மறுத்­து­விட்­டது.

“இந்­தி­யா­வில் கிட்­டத்­தட்ட 500 விவ­சா­யக் குழுக்­கள் உள்­ளன. அவற்­றில் 32 குழுக்­க­ளுக்கு மட்­டுமே பேச்­சு­வார்த்­தை­யில் பங்­கேற்க மத்­திய அரசு அழைப்பு விடுத்­துள்­ளது. அத்துடன், பிர­த­மர் இந்­தப் பேச்­சு­வார்த்­தை­யில் பங்­கேற்­கப் போவ­தில்லை. இந்­தக் கார­ணங்­களுக்­காக, நாங்­கள் பேச்­சு­வார்த்­தை­யில் இடம்­பெறமாட்­டோம்,” என்று அந்த அமைப்­பின் பொதுச் செய­லா­ளர் சர்­வான் சிங் பந்­தேர் கூறி­னார்.

“புதிய சட்­டங்­களை ரத்து செய்து, குறைந்­த­பட்ச ஆதார விலை தொடர்­பில் புதிய சட்­டம் இயற்­றப்­பட வேண்­டும் என வலி­யு­றுத்­து­வோம். அர­சாங்­கம் அதற்கு இணங்­க­வில்லை எனில் போராட்­டத்­தைத் தொடர்­வோம்,” என்­றார் பார­திய விவ­சா­யி­கள் சங்­கத்­தின் ஜக்­ஜீத் சிங் தாலே­வால்.

இவ்வேளையில், விவ­சா­யச் சங்­கப் பிர­தி­நி­தி­கள், மத்­திய அர­சுப் பிர­தி­நி­தி­கள், வேளாண் வல்­லு­நர்­கள் ஆகி­யோர் அடங்­கிய ஒரு குழுவை அமைத்து, புதிய சட்­டங்­கள் குறித்து விவா­திக்­க­லாம் என்று பேச்­சு­வார்த்­தை­யின்­போது மத்­திய அரசு தரப்­பில் ஓர் ஆலோசனை முன்வைக்கப்பட்டதாகத் தக­வல்­கள் வெளி­யா­கி­ன.

இத­னி­டையே, விவ­சா­யி­க­ளின் போராட்­டம் அனைத்­து­லக அள­வில் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. கன­டா­வில் வாழும் சீக்­கி­யர்­க­ளுக்கு குரு­நா­னக் ஜெயந்தி வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்த அந்­நாட்­டின் பிர­த­மர் ஜஸ்­டின் ட்ரூடோ, இந்­தி­யா­வில் நடந்து வரும் விவ­சா­யி­க­ளின் போராட்­டம் கவ­லை­ய­ளிப்­ப­தாக உள்­ளது என்­றும் குறிப்­பிட்­டார்.

ஆனால், உண்­மையை அறி­யா­மல் பேசி­யி­ருப்­ப­தா­கக் கூறி, இந்­திய அரசு அவ­ருக்­குக் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!