தங்கக் கடத்தலில் வெளிநாட்டினருக்குத் தொடர்பு

1 mins read
6343a4da-e81f-45ac-9a2a-e42d6ee4d07d
படம்: ஊடகம் -

தங்­கக் கடத்­தல் விவ­கா­ரத்­தில் வெளி­நாட்­டி­னர் பல­ரும் உய­ர­தி­கா­ரி­கள் பல­ரும் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­தாக முக்­கிய குற்­ற­வா­ளி­யா­கக் கரு­தப்­படும் ஸ்வப்னா சுரேஷ் வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ள­தா­கத் தக­வல் வெளி­யாகியுள்ளது.

ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­கள் துணைத் தூத­ரக ஊழி­யர்­க­ளு­டன் வெளி­நாட்­டுக் குடி­மக்­கள் பல­ரும் தங்­கக் கடத்­த­லுக்கு உடந்­தை­யாக இருந்­த­னர் என்று ஸ்வப்னா தெரி­வித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அவ­ரது வாக்­கு­மூ­லம் முத்­திரை­யி­டப்­பட்ட உறை­யில் வைக்கப்பட்டு, பொரு­ளி­யல் குற்­றங்­க­ளுக்­கான நீதி­மன்­றத்­தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது.

கடந்த மாதம் 27ஆம் தேதி சுங்­கத்­துறை விசா­ர­ணை­யின்­போது ஸ்வப்னா அளித்த தக­வல்­கள், தங்­கக் கடத்­தல் வழக்­கில் மிக முக்­கி­ய­மா­ன­வை­யா­கக் கரு­தப்­ப­டு­கின்­றன.

தங்­கம் மட்­டு­மின்றி அமெ­ரிக்க டால­ரும் கடத்­தப்­பட்­டது குறித்து ஸ்வப்னா வாய்­தி­றந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அதில் பல பெரும்­புள்­ளி­க­ளுக்­கும் பங்­கி­ருப்­ப­தாக விசா­ர­ணைக் குழு கோடி­காட்­டி­யது.

அதே நேரத்­தில், அவர்­கள் யார் என்­பதை அதி­கா­ரி­கள் குறிப்­பி­ட­வில்லை. நீதி­மன்ற ஆணை­யி­லும் அவர்­க­ளின் பெயர்­கள் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

இவ்­வே­ளை­யில், ஸ்வப்­னா­வின் கூட்­டா­ளி­யா­கக் கரு­தப்­படும் சரித்­தி­டம் கடந்த மாதம் 28ஆம் தேதி வாக்­கு­மூ­லம் பெறப்­பட்டு, அது­வும் முத்­தி­ரை­யி­டப்­பட்ட உறை­யில் நீதி­மன்­றத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. சரித்­தின் வாக்­கு­மூ­ல­மும் ஸ்வப்னா­வின் வாக்­கு­மூ­ல­மும் பெரும்­பா­லும் ஒத்­துப்­போ­வ­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, ஸ்வப்­னா­வை­யும் சரித்­தை­யும் மேலும் மூன்று நாள்கள்­காவ­லில் வைக்க எர்­ணா­குளம் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்டுள்­ளது.

தங்­கக் கடத்­த­லில் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு உள்ள தொடர்பு குறித்து தேசிய புல­னாய்வு முகவை விசா­ரிக்­கும் எனக் கூறப்­பட்­டது. ஆகை­யால், விசா­ர­ணைக்­காக அந்த அமைப்­பும் ஸ்வப்­னா­வைக் காவ­லில் எடுக்­கக்­கூ­டும்.

குறிப்புச் சொற்கள்