பிரியாணியால் சண்டை: நாத்தனார் அடித்ததில் பெண் உயிரிழப்பு

1 mins read
8b771b4e-7676-4f93-9e7e-807da67853d8
படம்: இந்திய ஊடகம் -

கோல்கத்தாவின் டால்ஹவுஸ் பகுதியில் கட்டடக்கலை நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் 40 வயது மாது, தம்முடைய நாத்தனார் தம் மகனுக்கு கெட்டுப் போன பிரியாணியக் கொடுத்ததாக எண்ணி ஆத்திரமடைந்தார். கெட்டுப்போன பிரியாணியைச் சாப்பிட்டதால்தான் தம்முடைய மகன் வாந்தி எடுத்ததாக அவர் நம்பினார்.

அவருடைய நாத்தனாரான 48 வயதான ஃபல்குனி பாசு எனும் பெண்ணை சரமாரியாக அந்தப் பெண் தாக்கியதில் ஃபல்குனி பாசு மயக்கமடைந்தார்.

அவசர சிகிச்சை வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சரமாரியாக அடித்ததில் அந்தப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தாக்கிய பெண்ணை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்