மகாராஷ்டிர மாநிலத்தில் சாதிப் பெயர் கொண்ட குடியிருப்புகளின் பெயர்கள் மாற்றப்படும்: மாநில அரசு

மகாராஷ்டிர மாநிலத்தில் சாதிப் பெயர் கொண்ட குடியிருப்புகளின் பெயர்கள் மாற்றப்படும்: மாநில அரசு

1 mins read
ee12160f-96c6-49b6-a6f0-ae7cd87e08c5
படம்: இந்திய ஊடகம் -

மகாராஷ்டிர மாநிலத்தில் சாதிப் பெயர் கொண்ட குடியிருப்புகளின் பெயர்கள் படிப்படியாக மாற்றப்படும் என அம்மாநில சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்புதலை மாநில அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சாதிப்பெயர் உள்ளதாகவும் மகாராஷ்டிரா போன்ற வளரும் மாநிலங்களுக்கு இது பொருத்தமானது அல்ல என்றும் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதிப்பெயர்களுக்கு பதில் தேசிய தலைவர்கள் உள்ளிட்ட பொதுவான பெயர்கள் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தங்கள் அரசின் இத்திட்டம் மக்கள் மனதில் மாற்றம் கொண்டு வரும் என்று அமைச்சர் தனஞ்சய் முண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசின் முற்போக்கான முடிவு வரவேற்புக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்