இந்­தி­யா­வில் இறுதிக்கட்ட ஆய்வில் ஐந்து கொரோனா தடுப்பூசிகள்

இந்­தி­யா­வில் இறுதிக்கட்ட ஆய்வில் ஐந்து கொரோனா தடுப்பூசிகள்

1 mins read
266b805d-80e9-47aa-b8c6-822c97064728
படம்: ராய்ட்டர்ஸ் -

இந்­தி­யா­வில் ஐந்து கொரோனா தடுப்­பூசி மருந்­து­கள் இறு­திக்­கட்ட ஆய்­வில் உள்­ள­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

அந்த ஐந்து மருந்­து­களில் ஏதே­னும் ஒன்­றுக்கு இந்­திய மருந்­துக்­கட்­டுப்­பாட்­டுக் கழ­கம் 'அவ­சர அங்­கீ­கா­ரம்' அளிக்­கும் என எதிர்­பார்ப்­ப­தாக டெல்லி எய்ம்ஸ் மருத்­து­வ­மனை இயக்­கு­ந­ரான மருத்­து­வர் ரன்­தீப்­கு­லே­ரியா தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­ட­டம் பேசிய அவர், ஃபைசர் நிறு­வ­னத்­தின் தடுப்­பூ­சிக்கு இங்­கி­லாந்து அங்­கீ­கா­ரம் அளித்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­னார்.

ஃபைசர் நிறு­வ­னத்­தின் தடுப்­பூசியை இந்­தியா போன்ற வள­ரும் நாடு­களில் விநி­யோ­கிப்­பது பெரும் சவா­லாக இருக்­கும் என்­றும் அத்­த­டுப்­பூ­சியை மைனஸ் 70 டிகிரி தட்­ப­வெப்­பத்­தில் வைத்­துப் பரா­ம­ரிக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்­றும் மருத்­து­வர் ரன்­தீப் குறிப்­பிட்­டார்.

"இதற்­கான அடிப்­ப­டைக் கட்­ட­மைப்பு வச­தி­கள் நிச்­ச­யம் தேவை. மற்­ற­படி தடுப்­பூசி, மருந்­து­களை நாடு முழு­வ­தும் உள்ள நகர்ப்­புற மற்­றும் கிரா­மப்­பு­றங்­களில் எளி­தில் விநி­யோ­கிப்­ப­தற்­கான வசதி இந்­தி­யா­வில் உள்­ளது," என்­றார் மருத்­து­வர் ரன்­தீப்.

இந்­தி­யா­வில் ஃபைசர், ஆஸ்ட்­ரா­ஜெ­னகா, பாரத் பயோ­டெக், சைடஸ் கெடிலா, டாக்­டர் ரெட்­டிஸ் லேப் ஆகிய ஐந்து நிறு­வ­னங்­கள் தயா­ரித்­துள்ள தடுப்­பூ­சி­க­ளின் இறு­திக்­கட்ட ஆய்வு நடை­பெற்று வரு­கிறது.

இதற்­கி­டையே, விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து போடும் பணி விரைவாக தொடங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்