ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில், அரசுப்பள்ளி ஒன்றின் வகுப்பறையில் சக மாணவிக்கு தாலிகட்டிய சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ராஜமுந்திரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் ஒருவன், கடந்த 17ம் தேதி தனது வகுப்பில் படிக்கும் மாணவிக்கு பள்ளி வகுப்பறையில் வைத்து தாலிகட்டி திருமணம் செய்துகொண்டார்.
இந்தத் திருமணம் தொடர்பிலான காணொளி சமூக வலைதளத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. காணொளியும் புகைப்படங்களும் கல்லூரி முதல்வரின் பார்வைக்குச் சென்ற நிலையில் திருமணம் செய்து கொண்ட இரண்டு பேர் மற்றும் திருமணத்திற்கு உதவிய மற்றொரு மாணவி ஆகிய மூவரும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

