புதுடெல்லி: நாட்டிலுள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார் தொழிலதிபர் விஜய் மல்லையா. அவரை நாடு கடத்தி அழைத்துவரும் முயற்சி களில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சட்ட சிக்கல்கள் காரணமாக அவரை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்துவர இயலவில்லை. இதற்கிடையே, மல்லையா மீதான பண மோசடி வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறை, அவருக்கு வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்தது. அதன்படி பிரான்சில் மல்லையா வுக்குச் சொந்தமான சொத்துகள் அமலாக்கத் துறை முயற்சியால் முடக்கப்பட்டுள்ளன. சுமார் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து களை இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று பிரான்ஸ் அதிகாரிகள் முடக்கி வைத்து உள்ளனர்.
மல்லையாவின் சொத்துகள் பிரான்சில் முடக்கம்
1 mins read

