கவுகாத்தி: ஓடுபாதையில் விமானத்தைத் தரை இறக்கியபோது கவனக்குறைவாகச் செயல்பட்ட இரு விமானிகளுக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் தனியார் விமானம் ஒன்று பெங்களூருவில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது.
முன்னதாக அந்த விமானம் ஓடுபாதையில் தரையிறங்குவதற்கான குறிப்புகள் அளிக்கப்பட்டன. ஆனால், தரையிறங்க வேண்டிய இடத்துக்கு முன்பாகவே அந்த விமானம் திடீரென தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. விதிமுறையை மீறி முன்கூட்டியே தரையிறங்கியதால் ஓடுபாதையின் துவக்கத்தில் உள்ள சில மின் விளக்குகள் சேதமடைந்தன. எனினும் பயணிகள் யாருக்கும் எந்தவிதக் காயங்களும் ஏற்படவில்லை என அத்தனியார் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் விமானிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.

