முழு பாதுகாப்பு உடையில் மணமகன், மணமகள் மட்டுமல்ல... திருமணத்தை நடத்தி வைத்தவர்களும்தான்...

முழு பாதுகாப்பு உடையில் மணமகன், மணமகள் மட்டுமல்ல... திருமணத்தை நடத்தி வைத்தவர்களும்தான்...

1 mins read
49cdcdb0-4ecf-4d5d-af9a-36bb9a5d7bd2
படம்: சமூக ஊடகத்தில் பரவிய காணொளியிலிருந்து -

ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் பரா பகுதியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்கள் மட்டுமின்றி, திருமணத்தை நடத்தி வைத்தவர்களும் முழு பாதுகாப்பு உடையில் இருந்தனர்.

இந்தத் திருமணத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருமணத்திற்கு முன்னர் மணப்பெண்ணும், மணமகனும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்துகொண்டனர். அப்போது மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

திருமணத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ விரும்பாத நிலையில், வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்தியுள்ளனர்.

மணமக்கள் உட்பட சுமார் 5 பேர் மட்டுமே அந்தக் காணொளியில் காணப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் முழு பாதுகாப்பு உடையில் காணப்படுகின்றனர். வெகு தொலைவில் சிலர் இருந்தாலும் அவர்கள் திருமணத்துக்கு வந்தவர்கள்தானா என்பது தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்