கத்தரிக்கோலால் குத்தி மனைவியைக் கொன்று, சடலத்துக்கு அருகிலேயே அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்த ஆடவர்

1 mins read
4bfa72cd-6ec7-497f-a42f-133fc4102f2f
கொலை செய்யப்பட்ட ஷிவ் கன்வார். படம்: இந்திய ஊடகம் -

ராஜஸ்தானில் ஜோத்பூர் நகரில் பிஜேஎஸ் என்ற பகுதியில் வசித்து வந்த விக்ரம் சிங், 35, என்பவருக்கு வேலை போய்விட்டதால் வீட்டில் மனைவிக்கும் அவருக்கும் இடையில் எப்போதுமே பிரச்சினை இருந்து வந்தது.

இதனால் எரிச்சல் அடைந்த விக்ரம் சிங், ஒரு நாள் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து ஷிவ் கன்வார், 30, என்ற தன் மனைவியைக் பல முறை குத்தினார்.

அந்தப் பெண்மணி தரையில் ரத்த வெள்ளத்தில் துடித்தார். ஆனால் அதைப் பெரிதாகக் கருதாமல் போலிசுக்கும் உறவினர்களுக்கும் நிதானமாக தகவல் தெரிவித்துவிட்டு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தன் கைபேசியை எடுத்து அதில் விக்ரம் சிங் விளையாடிக் கொண்டு இருந்தார்.

தகவல் அறிந்து விரைந்த போலிஸ் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஆடவர் கைதாகி விசாரிக்கப்பட்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்