ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலுரு என்ற நகரின் பல இடங்களில் பரவிய மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 475 ஆக உயர்ந்தது.
அவர்களில் சுமார் 332 பேர் குணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த நோய்க்கான காரணம் குறித்து அதிகாரிகள் பல்வேறு கோணங்களிலும் ஆராய்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக நிபுணர்களுடன் பேசிய பாஜக எம்பி நரசிம்மராவ், இந்த மர்ம நோய்க்கு 'ஆர்கனோகுளோரின்' என்ற நச்சுத்தன்மைப் பொருள் காரணமாக இருக்கக்கூடும் என்றார்.
இது பற்றியும் ஆராயப்படுகிறது.