விப்ரோ ஊழியர்களுக்கு 8% வரை சம்பள உயர்வு

விப்ரோ ஊழியர்களுக்கு 8% வரை சம்பள உயர்வு

1 mins read
033fadcf-4a5a-4c03-ba04-a37214958f4f
படம்: ஊடகம் -

இந்தியாவின் முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, வரும் ஜனவரி 1ஆம் தேதி தனது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அறிவித்துள்ளது.

அந்த உயர்வு 3% முதல் 8% வரை இருக்கும் என ஊழியர்கள் நிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விப்ரோவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக தியேரி டெலாபோர்ட்டே அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இந்த நிறுவனம் கடந்த 5 மாதத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சந்தைகளில் இருந்து அதிக அளவிலான திட்டங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக விப்ரோ பங்குகள் சுமார் 70% வளர்ச்சியை அடைந்துள்ளன.

கொவிட்-19 பாதிப்பு காரணமாக 2020ல் விப்ரோ ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஊதிய உயர்வுடன், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் 7,000 பேருக்குப் பதவி உயர்வும் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.