சென்னை: மக்கள் பலரது உள்ளம் கொள்ளை கொண்டவர் பிரபல தொலைக்காட்சி நடிகை சித்ரா, 28. இவர், திருவள்ளூர் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் நேற்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார். அவரது இந்த திடீர் மரணச் செய்தி சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தை யும் ஏற்படுத்தியுள்ளது.
சித்ராவின் மரணம் தொடர்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரை பதிவுத் திருமணம் செய்து கொண்ட ஹேம்நாத் என்பவர் போலிசாரின் விசாரணை வளை யத்திற்குள் சிக்கியுள்ளார். அத்துடன், சித்ரா சில நெருக்க மான காதல் காட்சிகளில் நடிப்பது பிடிக்காமல் கடந்த சில நாட்க ளாகவே அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை இருந்து வந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். சித்ராவின் மரணத்திற்கு பெரும்பாலோனோர் அவரது வருங்கால கணவர் ஹேம்நாத்தான் காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சித்ராவின் முகத்திலும் உடம்பி லும் உள்ள காயங்களும் அவரது மரணத்தில் ஏகப்பட்ட சந்தேகங்களைக் கிளப்பிவிட்டுள்ளன. ஈவிபி பிலிம் சிட்டியில் தொடர் நாடகத்துக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு அதிகாலை 2 மணி அளவில் தங்கும் விடுதிக்குத் திரும்பிய சித்ரா, தனது கணவர் ஹேம்நாத்திடம் குளிக்கவேண்டும் என்று கூறி அவரை வெளியே அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
வெளியே சென்ற ஹேம்நாத், நீண்ட நேரமாகியும் சித்ரா கதவைத் திறக்காமல் இருந்ததால் விடுதி நிர்வாகத்தின் உதவியுடன் கதவைத் திறந்து பார்த்தபோது சித்ரா உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நாடகத் தொடரில் முல்லையாக நடித்து தமிழ் மக்களின் இதயங்களில் மணம் வீசி வந்த சித்ரா, சமூக வலைத்தளப் பக்கத்தில் தன்னைத் தொகுப்பாளர், நடனமணி, நடிகை எனவும் குறிப்பிட்டுள்ளார். "சித்ராவின் இந்த திடீர் முடிவு நெஞ்சில் குண்டைத் தூக்கி போட்டுள்ளது," என்று அவரது தோழிகள் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளனர்.

