தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு

தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு

1 mins read
9241f2ab-102d-4ec2-ad82-fc6c68a7809b
ஸ்வப்னா. படம்: ஊடகம் -

தங்­கக் கடத்­தல் வழக்­கில் கைதா­கி­யுள்ள ஸ்வப்னா சுரே­ஷுக்கு கேரள அரசு உரிய பாது­காப்பு வழங்­க­வேண்­டும் என கொச்சி நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

சிறை­யில் தமது உயி­ருக்கு அச்­சு­றுத்­தல் உள்­ள­தாக ஸ்வப்னா தாக்­கல் செய்த மனுவை விசா­ரித்­த­பின் இவ்­வாறு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

ஐக்­கிய அமீ­ரக சிற்­ற­ர­சின் திரு­வ­னந்­த­புர தூத­ர­கத்­தின் பெய­ரைப் பயன்­ப­டுத்தி கிலோ கணக்­கி­லான தங்­கம் கேர­ளா­வுக்­குள் கடத்தி வரப்­பட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பாக தூத­ரக முன்­னாள் ஊழி­யர் ஸ்வப்னா சுரேஷ் உட்­பட பலர் கைதா­கி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் தமக்கு கொலை மிரட்­டல்­கள் விடுக்­கப்­பட்­ட­தாக ஸ்வப்னா கூறி­யுள்­ளார். செல்­வாக்கு மிக்க சில­ரால் சிறை வளா­கத்­துக்­குள் தமது உயி­ருக்கு அச்­சு­றுத்­தல் ஏற்­பட்­டுள்­ளது என்­றும் கடத்­தல் வழக்கு தொடர்­பில் முக்­கிய அர­சி­யல்­வா­தி­க­ளின் பெயரை வெளிப்­ப­டுத்­தக்­கூ­டாது என்று அதி­கா­ரி­கள் தம்மை வற்­பு­றுத்­தி­ய­தா­க­வும் ஸ்வப்னா கூறி­யுள்­ளார்.

"விசா­ரணை அமைப்­பு­க­ளு­டன் ஒத்­து­ழைக்­கக்­கூ­டாது என்­றும் அதி­கா­ரி­கள் என்­னி­டம் கூறி­னர். இல்­லை­யென்­றால் எனது குடும்­பத்­துக்­குத் தீங்கு நேரி­டும் என்­றும் மிரட்­டல் விடுக்­கப்­பட்­டது," என்று ஸ்வப்­னா­வின் மனு­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து அவ­ருக்­குப் பாது­காப்பு வழங்க கேரள மாநில சிறைத் துறைத் தலை­வ­ருக்கு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

ஸ்வப்­னா­வின் புகார் குறித்து தேசிய புல­னாய்வு முக­மை­யும் அம­லாக்­கத் துறை­யும் விசா­ரித்து வரு­வ­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன், சட்­டப்­பே­ர­வைத் தலை­வர் ராம­கி­ருஷ்­ணன் ஆகி­யோர் மேற்­கொண்ட வெளி­நாட்­டுப் பய­ணங்­கள் குறித்து விசா­ரிக்க வேண்­டும் என அம்­மா­நில காங்­கி­ரஸ் தலை­வர் முல்­லப்­பள்ளி ராமச்­சந்­தி­ரன் வலி­யு­றுத்தி உள்­ளார்.