புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல்: எதிர்த்தரப்புகள் குறைகூறல்

புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல்: எதிர்த்தரப்புகள் குறைகூறல்

1 mins read
1e3bf8ca-3cb4-4550-ba42-d10849791811
புதுடெல்லியில் டிசம்பர் 10ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டினார். படம்: இந்திய ஊடகம் -

இந்­தி­யா­வில் இப்­போதைய நாடா­ளு­மன்­றத்­துக்கு அருகே டாட்டா நிறு­வ­னம் கட்­ட­விருக்­கும் புதிய நாடா­ளு­மன்­றம் 150 ஆண்டு­களுக்­குப் பிற­கும் நீடிக்­கும் என்­றும் 150% அதிக உறுப்­பினர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

நாடா­ளு­மன்ற மக்­க­ள­வை­யின் கருப்­பொ­ருள் மயி­லா­க­வும் மேலவை­யின் கருப்­பொ­ருள் தாமரை­யா­க­வும் இருக்­கும். அதி­ந­வீன வசதி­க­ளு­டன் மின்னிலக்க ரீதியில் அந்த வளா­கம் முக்­கோண வடி­வில் அர­ச­மைப்­புச் சட்ட அரங்­கம் ஒன்­றுடன் அமைக்­கப்­பட்டிருக்­கும்.

மற்ற பகு­தி­களில் நான்கு மாடி­கள் அமைந்­தி­ருக்­கும். ஒவ்­வொரு மாடி­யி­லும் ஏரா­ள­மான அலு­வ­ல­கங்­கள் இருக்­கும்.

முதல் மாடி­யில் பிரம்­மாண்ட உண­வ­கம் ஒன்­றும் இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, அழைப்பு விடுக்­கப்­பட்­டும் அடிக்­கல் நாட்­டு­வி­ழா­வில் கலந்­து­கொள்­ளாத எதிர்த்­தரப்­பி­னர், கொவிட்-19 கிரு­மி ஒழி­ய­வில்லை; விவ­சா­யி­கள் போராட்­டம் தீர­வில்லை; பொரு­ளா­தா­ரம் சரி யில்லா ஒரு நேரத்­தில் புதிய மன்­றத்­துக்கு அடிக்­கல் நாட்­டு­விழா ஏன் என்று கேள்வி எழுப்பி­னர்.

குறிப்புச் சொற்கள்