மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் 'ஜீன்ஸ்', 'டீ-சட்டை' அணியத் தடை

மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் 'ஜீன்ஸ்', 'டீ-சட்டை' அணியத் தடை

1 mins read
76ceef6c-d248-4c0c-9450-7dcd59718baa
படம்: ஊடகம் -

மகாராஷ்டிரா அரசாங்கம், அரசு ஊழியர்கள் வேலையிடத்தில் ஜீன்ஸ், டீ சட்டை அணியக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

பொது நிர்வாகப் பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அரசாங்க அலுவலகங்களிலும் தலைமைச் செயலகத்திலும் ஜீன்ஸ், டீ சட்டைகளை அரசு ஊழியர்கள் அணிந்திருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள சுற்று அறிக்கையில் அரசு ஊழியர்களின் புதிய ஆடை விதிப்படி, அலுவலகத்திற்கு மோசமான செருப்புகளை அணியக் கூடாது. கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும்.

அரசு ஊழியர்களின் உடை பற்றிய தோற்றம் மக்கள் மத்தியில் மோசமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"அரசு ஊழியர்கள் பணியின் போது சுத்தமான, சரியான உடைகளை அணிய வேண்டும். பெண் ஊழியர்கள் புடவைகள், சல்வார், சுடிதார், குர்தா, பேண்ட் - சட்டைகளை அணியலாம், ஆண்கள் சட்டை - பேண்ட் அணியலாம். எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் உள்ள கண்களைப் பறிக்கும் ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணியக் கூடாது," என்று அறிக்கை தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் கதர் ஆடைகளை அணிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.