விவசாயிகள்: எங்களை தீவிரவாதிகள்போல நடத்தாதீர்கள்

விவசாயிகள்: எங்களை தீவிரவாதிகள்போல நடத்தாதீர்கள்

2 mins read
e9ff928e-4878-42bf-a01b-0e7606ef1787
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். படம்: ஊடகம் -

உரி­மை­க­ளுக்­கா­கவே போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும் தங்­க­ளைத் தீவி­ர­வா­தி­கள் போல் நடத்­தக்­கூ­டாது என­வும் விவ­சா­யி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

விவ­சா­யி­கள் மத்­தி­யில் பிளவை உண்­டாக்கி போராட்­டத்­தைத் திசை­தி­ருப்ப மத்­திய அரசு முயற்சி செய்­வ­தா­க­வும் விவ­சாய சங்­கத் தலை­வர்­கள் புகார் எழுப்பி உள்­ள­னர்.

புதிய வேளாண் சட்­டங்­களை எதிர்த்து விவ­சா­யி­கள் போராடி வரும் நிலை­யில், ஹரி­யானா மாநில எல்­லை­யில் 60 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் கூடி­யி­ருப்­ப­தா­க­வும் நிலைமை கட்­டுக்­க­டங்­கா­மல் இருப்­ப­தா­க­வும் அம்­மா­நி­லக் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

ஹரி­யானா, மத்­தி­யப் பிர­தே­சம், உத்­த­ரப் பிர­தே­சம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் இருந்து ஏரா­ள­மா­னோர் டெல்­லியை நோக்­கிச் செல்­வ­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தற்போது சுமார் 30 விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சில சங்கங்கள் போராட்டக் களத்தில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்துள்ளன. இதனால் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மற்ற சங்கங்களின் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மத்திய அரசுடன் பேசிப் பலனில்லை என்பதால் தங்கள் போராட்டத்தை வேறு வகையில் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக கிஸான் சன்யுக்த் மோர்ச்சாவின் தலைவர் ஷிவ்குமார் தெரிவித்துள்ளார்.

விவ­சா­யி­கள் மத்­தி­யில் பிளவை உண்­டாக்கி போராட்­டத்­தைத் தோல்­வி­யு­றச் செய்­யும் முயற்­சி­யில் மத்­திய அரசு ஈடு­பட்­டுள்­ள­தாக அவர் குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

பார­திய கிஸான் யூனி­யன் தலை­வ­ரான குரு­நாம்­சிங் சாருணி கூறு­கை­யில், 40 முக்­கிய விவ­சா­யச் சங்­கங்­கள் ஒன்­றா­கக் கூடி ஒரு­மித்த கருத்­து­டன் போராட்­டத்தை முன்­னெ­டுத்து நடத்தி வரு­கின்றன என்­றார்.

இதற்­கி­டையே விவ­சா­யி­கள் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­ப­டா­விட்­டால் மீண்­டும் உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்­தில் ஈடு­ப­டப் போவ­தாக சமூக செயல்­பாட்­டா­ளர் அன்னா ஹசாரே எச்­ச­ரித்­துள்­ளார்.

இதற்­கி­டையே டெல்­லி­யில் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள விவ­சா­யி­கள் தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டு­வ­தாக பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

எதிர்க்­கட்­சி­யி­னர் முன்பு ஆட்­சி­யில் இருந்­த­போது புதிய வேளாண் சட்­டங்­க­ளுக்கு ஆத­ர­வாக இருந்­த­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.