மகாராஷ்டிராவில் முதற்கட்டமாக 30 மில்லியன் பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் தகவல்

மகாராஷ்டிராவில் முதற்கட்டமாக 30 மில்லியன் பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் தகவல்

1 mins read
99a98745-b0bd-4a8c-91f1-a667d40c30b6
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 150 மில்லியனாக அதிகரித்து உள்ளது. புது டெல்லியில் நடமாடும் பரிசோதனைக் கூடத்தில் மாதிரிகள் சேகரிக்கப்படு கின்றன.படம்: ஊடகம் -

மகா­ராஷ்­டி­ரா­வில் கொரோனா பாதிப்பு குறைந்­து­வ­ரும் நிலை­யில் அங்கு முதற்­கட்­ட­மாக 30 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­படும் என அம்­மா­நில சுகா­தார அமைச்­சர் ராஜேஷ் தோபே தெரி­வித்­துள்­ளார்.

மத்­திய அரசு தடுப்­பூ­சி­களை இல­வ­ச­மாக வழங்­கா­விட்­டா­லும் மாநில அரசு உரிய ஏற்­பா­டு­க­ளைச் செய்­யும் என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமது கணிப்­பின்­படி மருத்­துவ ஊழி­யர்­கள், சுகா­தார, முன்­க­ளப் பணி­யா­ளர்­கள், 50 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள், பிற நோய் பாதிப்பு உள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை மட்­டும் 3 கோடி வந்­து­வி­டும் என்று அவர் சுட்­டிக்காட்­டி­னார்.

மத்­திய அரசு தடுப்­பூ­சியை இல­வ­ச­மாக வழங்­க­வேண்­டும் என வலி­யு­றுத்­திய ராஜேஷ் தோபே, இது­தொ­டர்­பான மத்­திய அர­சின் அறி­விப்­புக்­காக மகா­ராஷ்­டிர அரசு காத்­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

மத்­திய அரசு அனு­மதி வழங்­கும் பட்­சத்­தில் மகா­ராஷ்­டி­ரா­வில் ஜன­வரி மாதம் முதல் தடுப்­பூசி போடும் பணி தொடங்­கும் என்­றும் அதற்­கான ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­வ­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

தடுப்­பூசி போட அடை­யா­ளம் காணப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு கைபேசி வழி குறுந்­த­க­வல் அனுப்­பப்­படும் என்று குறிப்­பிட்ட அவர், மருந்து செலுத்­தப்­பட்­ட­பின் அரை மணி நேரம் மருந்து செலுத்­தும் மையத்­தில் இருக்­க­வேண்­டி­யது அவ­சி­யம் என்­றார். இது­போன்ற நடை­மு­றை­கள் எந்­த­வித சம­ர­ச­மு­மின்றி கடு­மை­யா­கப் பின்­பற்­றப்­படும் என்­றும் அமைச்­சர் மேலும் தெரி­வித்­தார்.