கவனமாக இருக்கவும்: நேப்பாளத்துக்கு இந்தியா அறிவுறுத்து

பிற நாடு­க­ளு­டன் ஒப்­பந்­தங்­கள் செய்­து­கொள்­வ­தில் நேப்­பாள அரசு மிகுந்த எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்­க­வேண்­டும் என்று இந்­திய முப்­ப­டை­க­ளின் தள­பதி பிபின் ராவத் தெரி­வித்­துள்­ளார்.

இவ்­வி­ஷ­யத்­தில் இலங்­கை­யைப் பார்த்து நேப்­பா­ளம் பாடம் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

சீனாவை மறை­மு­க­மா­கக் குறிப்­பிட்டே அவர் இவ்­வாறு அறி­வு­றுத்தி இருப்­ப­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

“இந்­தி­யா­வுக்­கும் நேப்­பா­ளத்­துக்­கும் இடை­யே­யான உறவு ஆழ­மா­னது மற்­றும் பர­வ­லா­னது. எனி­னும் தனது சுதந்­தி­ர­மான வெளி­நாட்­டுக் கொள்­கை­க­ளின் அடிப்­ப­டை­யில் தற்­போது சீனா உள்­ளிட்ட இதர நாடு­க­ளுக்­கும் நேப்­பா­ளம் தனது கத­வு­க­ளைத் திறந்து விட்­டுள்­ளது.

“அனைத்­து­லக விவ­கா­ரங்­கள் தொடர்­பாக நேப்­பாள அரசு சுதந்­தி­ர­மா­கச் செயல்­ப­ட­லாம். நேப்­பா­ள­மும் இந்­தி­யா­வும் ஏற்­கெ­னவே பிரிக்க இய­லாத வகை­யில் நெருக்­க­மாக உள்­ளன. இந்­நி­லை­யில் அமைதி மற்­றும் வளத்­தைக் காக்­கும் வகை­யில் தற்­போ­துள்ள உறவை மேலும் வலுப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கிறது,” என்று பிபின் ராவத் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வுக்­கும் நேப்­பா­ளத்துக்கும் இடை­யே­யான உறவு இம­ய­ம­லை­யைப் போல் உய­ர­மா­னது என்­றும் இந்­தி­யப் பெருங்­க­டல் போன்று ஆழ­மா­னது என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

“இரு­நா­டு­க­ளுக்­கும் இடை­யே­யான பொரு­ளா­தா­ரத் தொடர்­பு­கள் தனித்­து­வ­மா­னவை. எனி­னும் நாம் செய்­வ­தற்கு இன்­னும் அதி­க­முள்­ளது. இரு­த­ரப்­புக்­கு­மி­டை­யே­யான வர்த்­த­கம் 8.27 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை எட்­டி­யுள்­ளது. இந்­தி­யா­வி­லி­ருந்து சுமார் 7.76 பில்­லி­யன் டாலர் மதிப்­பி­லான பொருட்­கள் ஏற்­று­மதி­யாகி உள்­ளன. 508 மில்­லி­யன் டாலர் பொருட்­கள் இறக்­கு­ம­தி­யாகி உள்­ளன,” என்­றார் பிபின் ராவத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!