இந்தியாவில் கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைக் கடந்தது

இந்தியாவில் கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைக் கடந்தது

1 mins read
d8a771c1-4dbf-432f-86a4-b8daa1e48284
படம்: ஏஎஃப்பி -

இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியது.

அதேவேளையில், குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 95,50,712 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,153 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது எனவும் இந்தியாவில் ஒட்டுமொத்த தொற்று பாதிப்பு 10 மில்லியனைக் கடந்துள்ளது எனவும் அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,550,712 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 95.40% ஆக உள்ளது.

தற்போது 308,751 பேர் மருத்துவமனைகளில் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிருமித்தொற்றால் நேற்று 347 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 145,136 பேர் உயிரிழந்தனர் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்