'ஏர் பபள்ஸ்' திட்டத்தை விரிவுபடுத்திய இந்தியா; 23 நாடுகளுக்குச் செல்ல அனுமதி

'ஏர் பபள்ஸ்' திட்டத்தை விரிவுபடுத்திய இந்தியா; 23 நாடுகளுக்குச் செல்ல அனுமதி

2 mins read
019027e3-65f3-434b-8d46-e308650fdad5
படம்: ஊடகம் -

'ஏர் பப்பிள்ஸ்' திட்டத்தை இந்திய அரசு விரிவுபடுத்தி உள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும்.

விமானப் போக்குவரத்து தொடர்பான 'ஏர் பப்பிள்ஸ்' திட்டம் என்பது குறிப்பிட்ட இரு நாடுகள் தங்களுக்குள் செய்துகொள்ளும் ஒப்பந்தமாகும்.

ஒவ்வொரு நாடும் சூழ்நிலைக்கேற்ப மற்ற நாடுகளுடன் சில நிபந்தனைகள், கட்டுப்பாடுகளின் பேரில் 'ஏர் பப்பிள்ஸ்' ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள முடியும்.

கொரோனா விவகாரத்தால் உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் தங்கள் குடிமக்களை மட்டும் பிற நாடுகளில் இருந்து தாயகம் அழைத்து வர சிறப்பு விமானங்களை 'ஏர் பப்பிள்ஸ்' திட்டம் மூலம் இயக்கின. அந்த வகையில் இந்தியாவும் இத்திட்டம் மற்றும் 'வந்தே பாரத் மிஷன்' ஆகியவற்றின் மூலம் பல விமானங்களை அண்மைய சில மாதங்களாக இயக்கி வருகிறது.

பல்வேறு நாடுகளுடன் 'ஏர் பப்பிள்ஸ்' ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதை மேலும் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது 23 நாடுகளுடன் இந்தியா 'ஏர் பப்பிள்ஸ்' ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் ஐரோப்பா, ஐக்கிய அரபு சிற்றரசு, கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள இந்தியா அனுமதித்துள்ளது.

இதன்மூலம் பிரான்ஸ், ஜெர்மனி, ஹாலந்து, துபாய், அபுதாபி, தோஹா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் பின்னர் அங்கிருந்து தென் அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்குச் செல்லமுடியும். இதனால் இந்தியர்கள் பயணம் மேற்கொள்ளக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

'ஏர் பப்பிள்ஸ்' திட்டம் மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

இதற்கிடையே உள்நாட்டு விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபரில் 5.2 மில்லியனாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை நவம்பரில் 6.3 மில்லியனாக அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்