பெங்களூரு: நிர்வாணப் படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி பெங்களூரு பொறியியலாளரிடம் 1.4 மில்லியன் ரூபாய் பணம் பறித்த இரு பெண்கள் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த 25 வயது ஆடவர் இணைய செயலி மூலம் ஸ்வேதா என்பவருக்கு அறிமுகமானார். இதையடுத்து அவருடன் அச்செயலி மூலம் தினமும் பேசிவந்த நிலையில் நிகிதா என்ற மற்றொரு பெண்ணை அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஸ்வேதா.
பின்னர் அந்த ஆடவர் நிகிதாவிடமும் தொடர்பில் இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குறிப்பிட்ட கைபேசி எண்ணைக் கொடுத்து அதற்கு 2 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைத்தால் தாம் நிர்வாண கோலத்தில் பேசுவதாக கூறியுள்ளார் நிகிதா.
அவ்வாறே பணம் செலுத்திய பொறியியலாளரிடம் வாட்ஸ் அஃப் காணொளி மூலம் மீண்டும் தொடர்புகொண்டு பேசிய நிகிதா, ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக காட்சி அளிக்கும்படி அந்த ஆடவரைத் தூண்டிவிட்டுள்ளார். அந்த ஆடவரும் அவ்வாறே செய்ய அவரது நிர்வாண கோலத்தைத் தனது கைபேசியில் பதிவு செய்துள்ளார் நிகிதா.
இதையடுத்து அவரும் ஸ்வேதாவும் சேர்ந்து அந்த ஆடவரின் நிர்வாண படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் தங்களுக்குப் பணம் தரவேண்டும் என்று அவ்வப்போது மிரட்டி ரூ.1.6 மில்லியன் ரூபாய் பணத்தைப் பறித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

