கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் ஷிகெல்லா (Shigella) கிருமியால் 11 வயது சிறுவன் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது. பாக்டீரியா குடும்பத்தின் ஒரு வகையைச் சேர்ந்த இந்த ஷிகெல்லா மனிதனின் குடல் பகுதியில் பாதிப்பையும் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும்.
இதேபோன்று கோழிக்கோட்டில் 26 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டாலும் இவர்களில் பலர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர். 6 பேருக்கு ஷிகெல்லா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மனித கழிவுகளால் மாசுபட்ட நீர் மற்றும் உணவு வழியாக ஷிகெல்லா பாக்டீரியா தொற்று பரவக் கூடும். ஆயினும், இது சிகிச்சையின் மூலம் குணமடையச் செய்யலாம். அதற்கான நோயெதிர்ப்பு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் உள்ளன. முறையான சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் அந்த பகுதியிலுள்ள கிணறுகளில் குளோரின் கலந்து சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கினர். அவர்கள் ஓட்டல்கள் உள்ளிட்ட உணவு விடுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். விழிப்புணர்வு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கேரளாவில் சமீப காலங்களாக கொரோனா தொற்று அதிகரித்து மக்கள் அவதிப்படும் சூழலில் பாக்டீரியா தொற்றும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

