பிரிட்டனுக்கான விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தம்: இந்தியா அறிவிப்பு

பிரிட்­ட­னில் புதிய வகை கொரோனா கிருமி கண்­ட­றி­யப்­பட்­டதை அடுத்து அந்­நாட்­டுக்­கான விமா­னச் சேவையை நிறுத்தி வைப்­ப­தாக மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

புதிய வடி­வம் எடுத்­துள்ள கொரோனா கிருமி பிரிட்­ட­னில் தற்­போது வேக­மாக பரவி வரு­வ­தாக கூறப்­படும் நிலை­யில் அங்­கி­ருந்து இந்­தியா வரும் விமா­னங்­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்திவைக்­கப்­பட்­டுள்­ளன.

பிரிட்­ட­னில் தற்­போது நில­வும் சூழ­லைக் கருத்­தில் கொண்டு இம்­மு­டிவு எடுக்­கப்­பட்­டுள்ளதாக மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

டிசம்­பர் 31ஆம் தேதி வரை பிரிட்­டிஷ் விமா­னங்­க­ளின் வரு­கையை நிறுத்திவைக்க மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது என்­றும், இன்று நள்­ளி­ரவு 11.59 மணி முதல் இந்த உத்­த­ரவு அம­லுக்கு வரு­வ­தா­க­வும் விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்சு கூறி­யுள்­ளது.

முன்னதாக பல்வேறு நாடுகள் பிரிட்டனுக்கான விமானச் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்ததை அடுத்து அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களை நிறுத்த வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தனர்.

பிரிட்­ட­னில் மீண்­டும் கிரு­மித்­தொற்று அதி­க­ரித்­துள்­ள­தாக கூறப்­படும் நிலை­யில் புதிய வகை கொரோனா கிருமி குறித்து மக்­கள் பீதி­ய­டை­யத் தேவை­யில்லை என மத்­திய சுகா­தார அமைச்­சர் ஹர்­ஷ­வர்­தன் கூறி­யுள்­ளார்.

இந்­திய அரசு கிரு­மித்­தொற்று விவ­கா­ரத்­தில் விழிப்­பு­ட­னும் எச்­ச­ரிக்­கை­யு­ட­னும் செயல்­பட்டு வரு­வ­தாக அவர் கூறி­யுள்­ளார்.

முன்னதாக நாடு முழு­வ­தும் பொது­மக்­க­ளுக்கு கொரோனா தடுப்­பூசி செலுத்த 260 மாவட்­டங்­களில் 20 ஆயி­ரம் பணி­யாளர்­க­ளுக்கு உரிய பயிற்சி அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

வரும் ஜன­வரி மாதம் இந்­தி­யா­வில் கொரோனா தடுப்­பூசி பயன்­பாட்­டுக்கு வரும் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

உல­கம் முழு­வ­தும் கொரோனா தடுப்­பூ­சியை வாங்­கு­வது, தயா­ரிப்­பது, விநி­யோ­கிப்­பது உள்­ளிட்ட பணி­களை பல நாடு­கள் துரித கதி­யில் மேற்­கொண்­டுள்­ளன. இந்­நி­லை­யில் இந்­தி­யா­வில் முதற்­கட்­ட­மாக 30 கோடி பேருக்கு தடுப்­பூசி போட மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.

ஜன­வரி மாதம் தடுப்­பூசி செலுத்­தப்­படும் என்­றும் ராணுவ வீரர்­கள், முன்­க­ளப் பணி­யா­ளர்­கள், முதி­யோர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்­றும் அமைச்­சர் ஹர்ஷ்­வர்­தன் நேற்று முன்­தி­னம் அளித்த பேட்டி ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

“கொரோனா விவ­கா­ரத்­தைப் பொறுத்­த­வரை இந்­தி­யா­வுக்கு மோச­மான கால­கட்­டம் முடிந்­து­விட்­டது.

“எனி­னும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் நீடிப்­பது அவ­சி­யம். சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டுள்ள வழி­காட்டி நெறி­மு­றை­களை மக்­கள் கட்­டா­யம் கடைப்­பி­டிக்க வேண்­டும்.

“பல்­வேறு முன்­னணி நிறு­வ­னங்­கள் தடுப்­பூசி தயா­ரிப்­பில் ஈடு­பட்­டுள்­ளன. எனி­னும் தடுப்­பூ­சி­யின் செயல்­தி­றன்­தான் முக்­கி­யம். இவ்­வி­ஷ­யத்­தில் எந்­த­வித சம­ர­சத்­துக்­கும் இட­மில்லை,” என்று ஹர்ஷ்­வர்­தன் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!