பேச்சுவார்த்தைக்கு வருக: விவசாயிகளுக்கு அரசு அழைப்பு

பேச்சுவார்த்தைக்கு வருக: விவசாயிகளுக்கு அரசு அழைப்பு

2 mins read
ba7b8c71-96a8-4a6c-9dc4-634f397e682a
டெல்லியில் கடும் குளிருக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், போராட்டம் நடத்தும் இடங்களிலேயே தங்களுக்கான உணவை சமைத்துக் கொள்கிறார்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

வேளாண் சட்­டங்­கள் தொடர்­பாக அடுத்த சுற்­றுப் பேச்சு­வார்த்­தைக்கு வரு­மாறு போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள விவ­சாய சங்­கங்­க­ளுக்கு மத்­திய அரசு அழைப்பு விடுத்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக அச்­சங்­கங்­க­ளுக்­குக் கடி­தம் அனுப்­பப்­பட்­டி­ருப்­ப­தாக மத்­திய வேளாண் அமைச்­சின் இணைச் செய­லா­ளர் விவேக் அகர்­வால் தெரி­வித்­துள்­ளார்.

போராட்­டத்­தில் ஈடு­பட்­டு­வ­ரும் விவ­சா­யி­கள் தங்­கள் குறை­கள், கவ­லை­கள், சந்­தே­கங்­க­ளைத் தெரி­வித்­தால் அடுத்­த­கட்ட பேச்­சு­வார்த்­தையை நடத்த இய­லும் என அவர் அக்­க­டிதத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

பேச்­சு­வார்த்­தைக்­கான தேதியை விவ­சா­யி­களே தீர்­மா­னிக்­க­லாம் என தெரி­வித்­துள்ள மத்­திய அரசு, விவ­சா­யி­கள் முன்­வைக்­கும் கோரிக்­கை­க­ளைப் பரந்த மன­து­டன் பரி­சீ­லிக்­க­வும் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்­க­வும் தயா­ராக இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே போராட்­டம் நடை­பெ­றும் இடங்­களில் விவ­சா­யி­கள் நேற்று உண்­ணா­வி­ர­தப் போராட்­டம் மேற்­கொண்­ட­னர். டெல்­லி­யில் போராட்­டக் களத்­தில் உள்ள விவ­சா­யி­களில் 11 பேர் கொண்ட குழு தொடர் உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்­தைத் தொடங்கி உள்­ளது. இந்­நி­லை­யில் விவ­சா­யி­க­ளுக்கு ஆத­ர­வாக மருத்­து­வர்­களும், தாதி­ய­ரும் போராட்­டத்­தில் இணைந்­துள்­ள­னர்.

டெல்­லி­யில் விவ­சா­யச் சங்­கப் பிர­தி­நி­தி­க­ளைச் சந்­தித்து அவர்­கள் தங்­கள் ஆத­ர­வைத் தெரி­வித்­த­னர். விவ­சா­யி­க­ளின் போராட்­டத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்து நாடு முழு­வ­தும் வரும் 27ஆம் தேதி பொது­மக்­கள் மணி­யோசை எழுப்­ப­வேண்­டும் என விவ­சா­யச் சங்­கங்­கள் கோரிக்கை விடுத்­துள்­ளன.

கொரோனா கிரு­மித்தொற்­றுக்கு எதி­ரா­கப் போரா­டிய சுகா­தா­ரப் பணி­யா­ளர்­களை உற்­சா­கப்­ப­டுத்த நாட்டு மக்­கள் அனை­வ­ரும் மணி­யோசை எழுப்­ப­வேண்­டும் என்று பிர­த­மர் மோடி முன்பு கேட்­டுக்­கொண்­ட­தைச் சுட்­டிக்­காட்­டும் விவ­சா­யச் சங்­கங்­க­ளின் பிர­தி­நி­தி­கள், அதே­போன்று விவ­சா­யி­க­ளுக்­காக மக்­கள் மணி­யோசை எழுப்­ப­வேண்­டும் என கேட்­டுக் கொண்­ட­னர்.

25 நாட்­க­ளாக நீடித்­து­வ­ரும் இந்­தப் போராட்­டத்­தின்­போது விபத்து, உடல்­ந­லக் குறைவு, கடும் குளிர் உள்­ளிட்ட பல்­வேறு கார­ணங்­க­ளால் இது­வரை 33 விவ­சா­யி­கள் உயி­ரி­ழந்­தி­ருப்­ப­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

உயி­ரி­ழந்த விவ­சா­யி­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தும் நிகழ்ச்­சி­கள் பஞ்­சாப், ஹரி­யா­னா­வின் பல்­வேறு பகு­தி­களில் நேற்று நடை­பெற்­றன. நூற்­றுக்­க­ணக்­கான கிரா­மங்­களில் மனி­தச்­சங்­கிலி அமைத்து அஞ்­சலி செலுத்­தப்­பட்­ட­தாக அகில இந்­திய கிஷான் சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி வரும் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ஹரி­யானா நெடுஞ்­சா­லை­யில் உள்ள சுங்­கச்­சா­வ­டி­களை முற்­று­கை­யி­டப் போவ­தா­க­வும் விவ­சாய சங்­கங்­கள் அறி­வித்­துள்­ளன.