இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60% அதிகரிப்பு

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60% அதிகரிப்பு

1 mins read
b9ea647f-63ab-4b9b-ba20-7019e5c50f35
படம்: ஊடகம் -

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை மட்டுமின்றி புலி, சிங்கம், ஆகியவற்றின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது, பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் நாட்டின் வனவிலங்கு மற்றும் பல்லுயிர் பெருக்க வளர்ச்சிக்கு சான்றாக இருக்கிறது என்று தமது அறிக்கையில் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு மதிப்பீட்டில் இந்தியாவில் இருந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 7,910.

அதன்படி பார்த்தால் தற்போது சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 3,421, கர்நாடகாவில் 1,783 மற்றும் மகாராஷ்டிராவில் 1,690 என 3 மாநிலங்களில் அதிக அளவில் சிறுத்தைகள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்