புதுவை கிரிக்கெட் அணி: தமிழர்கள் புறக்கணிப்பு

புதுவை கிரிக்கெட் அணி: தமிழர்கள் புறக்கணிப்பு

1 mins read

காரைக்­கால்: புதுவை கிரிக்­கெட் அணி­யில் தமி­ழர்­கள் புறக்­கணிக்­கப்­ப­டு­வ­தாக தமிழ்த்­தே­சிய பேரி­யக்­கம் புகார் எழுப்­பி­யுள்­ளது.

இது­தொ­டர்­பாக வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், பிற மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் மட்­டுமே புதுவை அணி­யில் இடம்­பெற்­றி­ருப்­ப­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும் புதுவை அணி­யில் தற்­போது இடம்­பெற்­றுள்ள வீரர்­க­ளின் பெயர்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டுள்ள அந்த இயக்­கம் புதுவை மக்­கள்­தொ­கை­யில் 94 விழுக்­காட்­டி­னர் தமி­ழர்­கள் என சுட்­டிக் காட்­டி­யுள்­ளது.

"புதுவை அணி­யில் முழுக்க முழுக்க இந்­திக்­கா­ரர்­கள் உள்­ளிட்ட வெளி­மா­நி­லத்­த­வர்­களே தேர்வு செய்­யப்­ப­டு­கின்­ற­னர். புதுவை கிரிக்­கெட் சங்­கம் என்று குறிப்­பி­டப்­படும் தனி­யார் சங்­கத்­தின் மூலம் தொடர்ந்து இம்­மு­றை­கேடு நடந்து வரு­கிறது.

இந்த அநீ­தி­யைக் கண்­டித்து டிசம்­பர் 26ஆம் தேதி ஆர்ப்­பாட்­டம் நடத்­தப்­பட இருக்­கிறது," என்று தமிழ்த் தேசி­யப் பேரி­யக்­கம் வெளி யிட்ட அறிக்கையில் மேலும் தெரி­விக்கப்பட்டுள்ளது.