தனிமைப்படுத்தப்பட்ட 795 விமான பயணிகள்

தனிமைப்படுத்தப்பட்ட 795 விமான பயணிகள்

2 mins read
7fbfe61f-ff5c-4933-9dac-76900945daaf
பிரிட்டனில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பயணிகளுக்கு, தனிநபர் பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்த சுகாதாரப் பணியாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து அறிவுறுத்தினர்.படம்: ஊடகம் -

பிரிட்டனில் இருந்து டெல்லி வந்த 11 பேருக்கு தொற்று உறுதி

மும்பை: பிரிட்­ட­னில் புதிய வகை கொரோனா கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­பட்ட நிலை­யில் அங்­கி­ருந்து மும்பை, டெல்லி வந்தடைந்த 795 விமானப் பய­ணி­கள் தனி­மைப்­படுத்­தப்பட்­டுள்­ள­னர்.

டெல்லி வந்த 11 பேருக்கு கிரு­மித்­தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இந்­தியா உள்­ளிட்ட பல நாடு­கள் பிரிட்டனுக்­கான விமா­னச் சேவையை நிறுத்தி வைத்­துள்­ளன. வரும் 31ஆம் தேதி வரை பிரிட்­ட­னில் இருந்து இந்­தி­யா­வுக்கு விமா­னங்­கள் வர தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த திங்­கள் மற்­றும் செவ்­வாய்க்­கி­ழமை ஆக கடை­சி­யாக பிரிட்­ட­னில் இருந்து இந்­தி­யா­வுக்கு இயக்­கப்­பட்ட விமா­னங்­களில் வந்த அனைத்­துப் பய­ணி­களும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். குறிப்­பிட்ட அந்த இரு தினங்­களில் மட்­டும் 1,688 பேர் பிரிட்­ட­னில் இருந்து வந்­துள்­ள­னர். அவர்­களில் 745 பேர் மும்­பை­யில் உள்ள தங்­கும் விடு­தி­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். வெளி­மா­வட்­டம் மற்­றும் வெளி மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் அவ­ர­வர் சொந்த ஊர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­தாக அதிகாரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

ஏழா­வது நாளின் முடி­வில் அவர்­கள் அனை­வ­ருக்­கும் கிரு­மித்­தொற்­றைக் கண்­ட­றி­வ­தற்­கான பரி­சோ­தனை செய்­யப்­படும் என்­றும் அதில் தொற்று இருப்­பது கண்­ட­றிப்­பட்­டால் மருத்­து­வ­ம­னை­யில் அல்­லது மீண்­டும் விடு­தி­க­ளி­லேயே 14 நாட்­க­ளுக்­குத் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு சிகிச்சை அளிக்­கப்­படும் என்­றும் தொற்று இல்­லா­த­வர்­கள் மேலும் ஏழு தினங்­க­ளுக்­குத் தங்­கள் வீடு­க­ளி­லேயே தனி­மைப்­படுத்­தப்­ப­டு­வர் என்­றும் மகா­ராஷ்­டிர சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

மேலும் கடந்த ஒரு மாத காலத்­தில் பிரிட்­ட­னி­லி­ருந்து நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளுக்கு வந்­தி­றங்­கிய அனை­வ­ரை­யும் கண்­கா­ணிக்க வேண்­டும் என மத்­திய சுகா­தார அமைச்சு அறி­வு­றுத்தி உள்­ளது.

இதற்­கி­டையே பிரிட்­ட­னி­லி­ருந்து டெல்லி வந்து சேர்ந்த பய­ணி­களில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 50 பேர் தனிமைப்படுத்தப் பட்டனர்.

நான்கு விமா­னங்­களில் வந்த 950 பேர் டெல்­லி­யில் தரை இறங்­கி­ய­வு­டன் கொவிட்-19 பரி­சோ­தனைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

எனினும், அவர்களைத் தொற்றியது புதுவகை கொரோனா கிருமியா என்பது தெரியவில்லை. அவர்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன.