காவல்துறை அதிகாரி முகத்தில் தேநீர் ஊற்றிய பெண்

காவல்துறை அதிகாரி முகத்தில் தேநீர் ஊற்றிய பெண்

1 mins read

பாட்னா: மருத்துவமனை முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற காவல்துறை அதிகாரி முகத்தில் தேநீர்க்கடை வைத்துள்ள பெண் ஒருவர் சுடச்சுட தேநீரை ஊற்றிய சம்பவம் பீகார் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முசாபூர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உள்ள பகுதியை பலர் ஆக்கிரமித்து சிறு கடைகளை அமைத்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அக்கடைகளை அகற்ற போலிசார் நேற்று முன்தினம் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது தேநீர்க் கடை நடத்திவரும் சரிதாதேவி என்பவரிடம் காவல்துறை அதிகாரி சுமன் ஜா விசாரணை மேற்கொண்டபோது வாக்குவாதம் மூண்டது.

ஆவேசமடைந்த சரிதாதேவி அதிகாரியின் முகத்தில் சூடாக இருந்த தேநீரை ஊற்றினார். இதனால் முகம் வெந்துபோன நிலையில் அதிகாரி சுமன் ஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சரிதா தேவி மீது வழக்குப்பதிவு செய்த போலிசார் பின்னர் அவரைக் கைது செய்தனர்.

அவருடன் இருந்த மேலும் இருவருக்கு போலிசார் வலை வீசி உள்ளனர்.